வ. மு. செய்யது அகமது
அல்ஹாஜ் வ. மு.செய்யது அகமது (பிறப்பு: 1957) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கூத்தாநல்லூரில் பிறந்த இவர் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொருளாளரும், பாரம்பரியம் மிக்க வடக்குக் கோட்டையார் முகம்மது அப்துல்லாவின் ஒரே மைந்தருமாவார். கட்டிடப் பராமரிப்புத் தொழிலில் முன்னோடியாகத் திகழ்பவராவாரான இவர் தீனிசைக் கவிஞரும், நல்ல பாடகருமாவார். 'திரை இசையில் தீனிசை' என்ற ஒலிநாடாவை முன்னாள் தமிழ் முதல்வர் கலைஞர் மூலம் வெளியிட்டுள்ளார்.
எழுதிய நூல்கள்
- அரசியல் அறம்
- இனிய உறவில் இரு சமூகங்கள்
.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011