வை. சுந்தரேச வாண்டையார்

வை. சுந்தரேச வாண்டையார் (V. Sundaresa Vandaiyar) இலக்கியம்,கல்வெட்டு ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு தமிழாராய்ச்சி செய்த தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார்.

பிறப்பும் கல்வியும்

தமிழ்நாட்டின் சிதம்பரத்தை அடுத்துள்ள இராதாநல்லூர் என்ற ஊரில் வைத்தியலிங்கம்-சிவகங்கையம்மை தம்பதியருக்கு மகனாக 115-12-1899 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று பிறந்தார். சிதம்பரம் நகரத்திலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

பணிகள்

முதன்முதலில் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியத் தொடங்கினார். பணிகளுக்கிடையே கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். சதாசிவப் பண்டாரத்தாரிடம் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் முறையைக் கற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக திராவிட மொழியியல் துறையில் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும், சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும், உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்கள்

  • கொட்டையூர்த் தல வரலாறு
  • செம்பியன் மாதேவியார்
  • திருவுசாத்தானக் கல்லெழுத்து
  • அன்பு நெறியினர் வாழ்க்கை
  • கல்வெட்டுத் தரும் கருத்துக்கள்
  • கரும்படு சொல்லி மாலை
  • அப்பர் ஐம்மணி மாலை
  • மயிலாப்பூர்ப் பதிகம்
  • தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுக்கள்
  • திருக்குறுகை வீரட்டம் திருநேரிசை
  • இரண்டாந் திருமுறையில் உள்ள தலங்கள்
  • பரிமேலழகர் உரையில் வந்துள்ள இலக்கணக் குறிப்புகள்
  • முப்பது கல்வெட்டுக்கள்.[1][2]

பெற்ற பட்டங்கள்

தருமபுரம் ஆதீனம் இவருக்கு,கல்வெட்டு ஆராய்ச்சிக் கலைஞர் எனும் பட்டத்தை வழங்கினார். குத்தாலம் வாழ் மக்கள், இவர் பணிகளைப் பாராட்டி,சைவ சித்தாந்த வித்தகர் என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

மறைவு

வை. சுந்தரேச வாண்டையார் 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 04 ஆம் தேதியன்று இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வை._சுந்தரேச_வாண்டையார்&oldid=26142" இருந்து மீள்விக்கப்பட்டது