வைத்திய நாத நாவலர்

வைத்திய நாத நாவலர் என்பவர் தமிழ்ப்புலவர் ஆவார். தமிழகத்தில் சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாரூரில் பிறந்தார். தந்தையர் பெயர் வன்மீக நாதர்.

தமிழ்ப்புலமை

தமிழில் சிறந்த புலமை பெற்ற பிறகு தமிழ் நூல்களைக் கற்பிப்பதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்தார்.

எழுதிய நூல்கள்

திருவேங்கடநாதரின் விருப்பப்படி இலக்கண விளக்கம் (அ) குட்டித் தொல்காப்பியம் என்னும் நூலையும் , இந்நூலில் தொல்காப்பியத்திலும், நன்னூளிலுமுள்ள நூற்பாக்கள் தொகுக்கப்பட்டிருப்பதுடன் இவரே எழுதிய நூல்களும் உள்ளன. இந்நூலுக்கு இவர் உறையும் எழுதியுள்ளார்.

சிறப்பு

இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சாமிநாத தேசிகர், நூலாசிரியரே நூலுக்குரை செய்வதற்கு இவரே சான்றாகக் கூறியிருக்கிறார்.

பிறநூல்கள்

திருவாரூர் மணிமாலை, நல்லூர்ப் புராணம், மயிலம்மை பிள்ளைத் தமிழ் முதலியன.

"https://tamilar.wiki/index.php?title=வைத்திய_நாத_நாவலர்&oldid=18203" இருந்து மீள்விக்கப்பட்டது