திருவைகுந்த விண்ணகரம்
(வைகுந்த விண்ணகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார்.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.[1]
திருவைகுந்த விண்ணகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | வைகுந்தநாதப் பெருமாள் கோயில் |
பெயர்: | வைகுந்த விண்ணகரம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவு: | திருநாங்கூர் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
விவரம் | பெயர் |
---|---|
இறைவன் | உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும் வைகுந்த நாதன் |
இறைவி | வைகுந்த வல்லி |
தீர்த்தம் | லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா |
விமானம் | அனந்த சத்ய வர்த்தக விமானம் |