வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி (நூல்)

வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி[1] என்னும் நூலினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் தொகுத்துள்ளனர்.

வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதி
நூலாசிரியர்சு. உத்தமசாமி,
ஏ. இல. விசயலட்சுமி,
ச. பழனிசாமி,
மா.மீனாட்சி சுந்தரம்
ம.சுகிர்தா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைவேளாண்மை அகராதி கலைச்சொல்
வெளியீட்டாளர்தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம்
வெளியிடப்பட்ட நாள்
2003
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்463
வேளாண்மைக் கலைச்சொற்கள்

நூல் விவரங்கள்

இந்நூலினை சு. உத்தமசாமி, ஏ.இல.விசயலட்சுமி, ச.பழனிசாமி, மா. மீனாட்சி சுந்தரம், ம. சுகிர்தா[2] ஆகியோர் தொகுத்துள்ளனர். இந்நூலினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம் 2003 இல் வெளியிட்டுள்ளது.

நூலின் உள்ளடக்கம்

இந்நூல் வேளாண்மைத் துறைக்கான கலைச்சொல் பேரகரமுதலி ஆகும். வேளாண்மைப்புலம் சார்ந்து பதினேழுத் துறைகளும், தோட்டக்கலைப்புலம், வனவியற் புலம், மனையியற் புலம், வேளாண்மைப் பொறியியற் புலம், பொதுச்சொற்கள் என்னும் வகையில் உள்ளடக்கங்கள் பகுப்பு செய்யப்பெற்றுள்ளன. இவ்வகரமுதலி புலம் சார்ந்து ஆங்கிலச்சொல் அதன் தமிழ்ச்சொல் என்னும் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. சு. உத்தமசாமி குழு, 2003, வேளாண்மைக்கலைச்சொல் பேரகராதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம், கோயம்புத்தூர்
  2. http://www.tamilkalanjiyam.in/index.php?title=வேளாண்மைக்_கலைச்சொல்_பேரகராதி_(நூல்)[தொடர்பிழந்த இணைப்பு]