வேலை (திரைப்படம்)

வேலை (Velai) என்பது 1998 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஜே. சுரேஷ் இயக்கி இப்படத்தை பாலகுமாரனால் எழுதியுள்ளார். படத்தில் விக்னேஷ், இந்திரஜா, நாசர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜே. வாசுதேவன் தயாரித்த இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படமானது 1998 பிப்ரவரி 26 இல் வெளியானது.[1]

வேலை
இயக்கம்ஜே. சுரேஷ்
தயாரிப்புஜே. வாசுதேவன்
கதைசுரேஷ்
பாலகுமாரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிக்னேஷ்
இந்திரஜா
நாசர்
ஒளிப்பதிவுசி விஜயஸ்ரீ
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஜே. வி. பிலிம்ஸ்
விநியோகம்தாரா கிரியேசன்ஸ்
வெளியீடு26 பெர்ப்ரவரி 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

யுவன் சங்கர் ராஜா தனது முதல் படமான அரவிந்தனுக்குப் பிறகு இரண்டாவதாக இப்படத்திற்கு இசை அமைத்தார். இதில் 5 பாடல்கள் உள்ளன. அறிவுமதி, பழனி பாரதி, ரவி பாரதி, ஆர். வி. உதயகுமார் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிரபலமான தமிழ் நடிகர் விஜய், பிரேம்ஜி அமரனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் விக்னேசுக்கு பின்னணி குரலை வழங்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த நாசர் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.[2]

எண் பாடல் பாடகர் (கள்) காலம் பாடல் வரிகள் குறிப்புகள்
1 'அச்சுதா அச்சுதா' யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் 4:40 பழனி பாரதி
2 'ஓய்வெடு நிலவே' ஹரிஹரன், பவதாரிணி 4:47 ஆர். வி. உதயகுமார்
3 'கன்னிப் பொண்ணு' பாப் ஷாலினி 4:23 ரவி பாரதி
4 'காலத்துக்கேத்த ஒரு கானா' விஜய், நாசர், பிரேம்ஜி அமரன் 5:08
5 'குன்னூரு பூச்சாடி' உதித் நாராயண், சுஜாதா மோகன் 4:38 அறிவுமதி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வேலை_(திரைப்படம்)&oldid=37880" இருந்து மீள்விக்கப்பட்டது