வேலணையூர் சுரேஷ்
வேலணையூர் சுரேஷ் (இராமச்சந்திரன் சுரேஷ்) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தன் கவிதைகளால் பங்காற்றியவர். போராளிக் கலைஞர்களால் இளங்கவிஞர் என வர்ணிக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவரது தாயார் வேலணை கிழக்கு பெருங்குளத்தைச் சேர்ந்தவர், தந்தையார் மண்கும்பானைச் சேர்ந்தவர். இவ்விருவருக்கும் புதல்வராகிய இவர், வேலணை கிழக்கு பெருங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறையில் பட்டம் பெற்றவர்.[1]
இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில
இவரது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுகள் சில
- வானம் தொடும் தூரம்[2]
- கடற்கரும்புலிகள் பாகம் 07[3]
- அலை பாடும் பரணி (2004)
- எமையாளும் மகாமாரி (2012)
- கைதடி வடக்கு கயிற்றசிட்டி கந்தன் புகழ்மாலை
- இலந்தைக்காடு சிவன் இசையமுதம்
- நவிண்டில் - கியாந்தோட்டம் சுந்தர ஐயப்பன் இசைமாலை
- நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் தெய்வீக கானங்கள் - 2
- கற்பகவிநாயகர் அருளமுதம் (இலண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)
- கருணை மழையே கனகதுர்க்கா (இலண்டன் ஈலிங் அம்மன் மீது பாடப்பெற்ற பாடல் இறுவெட்டு)
வெளிவந்த நூல்கள்
- களத்தீ[4] (கவிதைத் தொகுப்பு, நவம்பர், 1992, விடுதலைப்புலிகள் அரசியல்துறை வெளியீடு)
- உலராத மண் (கவிதைத் தொகுப்பு, 1995)
- கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும் (கவிதைத் தொகுப்பு, 2015)[5]
- பிள்ளைத் தமிழின்பம் (குழந்தைப் பாடல்கள், 2015)
- பாட்டாலே பரவசம் (பக்திப் பாடல்களை உள்ளடக்கிய பாடலாக்கத் தொகுப்பு, 2017)
மேற்சான்றுகள்
- ↑ "வேலணைத் தீவு புலவர்கள் வரலாறு (1995) பக். 32". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150827033739/http://thesakkatru.com/doc6139.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150827034750/http://thesakkatru.com/doc5371.html.
- ↑ ஆளுமை:சுரேஷ், இராமச்சந்திரன்
- ↑ கவிஞர் வேலணையூர் சுரேஷின் இருநூல்கள் வெளியீடு