வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம்
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பந்தட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,539 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,207 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,555 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 29 ஊராட்சிகள்; [4]
- அகரம்
- அனுக்கூர்
- அன்னமங்கலம்
- உடும்பியம்
- எறையூர்
- காரியானூர்
- கைகளத்தூர்
- தழுதாழை
- திருவாளந்துரை
- தேவையூர்
- தொண்டபாடி
- தொண்டமாந்துரை
- நூத்தப்பூர்
- நெய்குப்பை
- பசும்பலூர்
- பாண்டகபாடி
- பிம்பலூர்
- பிரம்மதேசம்
- பில்லங்குளம்
- பெரியம்மாபாளையம்
- பெரியவடகரை
- பேரையூர்
- மலையாளப்பட்டி
- மேட்டுப்பாளையம்
- வ. களத்தூர்
- வாலிகண்டபுரம்
- வெங்கலம்
- வெண்பாவூர்
- வேப்பந்தட்டை