வேத குமாரி காய்

வேத் குமாரி காய் (Ved Kumari Ghai) இந்தியாவைச் சேர்ந்த ஓர் சமசுகிருத அறிஞராவார். இவர் சம்மு பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத் துறையின் தலைவராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் 1931 திசம்பர் 16 அன்று சம்முவின் பிரதாப் மொகல்லாவில் பிறந்தார். சம்முவில் பள்ளிக் கல்வியை முடித்த இவர் 1953இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், 1958 இல் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் முதுகலைப்பட்டமும், 1960இல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் சமசுகிருத அறிஞரான இராம் பிரதாப்பை மணந்தார். [1]

தொழில்

சம்முவிலுள்ள பெண்கள் மகளிர் கல்லூரியில் சமசுகிருத பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1991 திசம்பர் 31 அன்று ஓய்வு பெறும் வரை சம்மு பல்கலைக்கழக முதுகலை நிலை சமசுகிருதத் துறையின் தலைவராக இருந்தார். 1966-67 மற்றும் 1978-80 ஆண்டுகளில் டென்மார்க்கின் கோபனாவன் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுகள் நிறுவனத்தில் பாணினியின் சமசுகிருத இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்பித்தார். தோக்ரி மொழியில்அறிஞரான, இவருக்கு இந்தியும் தெரியும். இவர் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். [1] இவர் அமர்நாத் யாத்திரைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். [2]

அங்கீகாரம்

 
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பத்மசிறீ விருதை 2014 மார்ச் 31 அன்று பேராசிரியர் வேத குமாரி காய்க்கு வழங்கினார்.
  • 2010 இல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது. [3]
  • சமசுகிருதத்தில் புலமைப்பரிசில் பெற்றதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் கௌரவச் சான்றிதழ்.[1]
  • சமூகப் பணிகளுக்காக ஜம்மு-காஷ்மீர் அரசால் 1995 இல் தங்கப் பதக்கம். [1]
  • 1997 இல் சமசுகிருதத்திற்கான குடியரசுத் தலைவர் விருது. [1]
  • 2005 இல் தோக்ரா ரத்தன் விருது, 2009 இல் வாழ்நாள் சாதனையாளர் விருது. 2010 இல் ஸ்திரீ சக்தி புரஸ்கார். [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வேத_குமாரி_காய்&oldid=18930" இருந்து மீள்விக்கப்பட்டது