வேதாளம் (திரைப்படம்)
வேதாளம்[3] (Vedalam) சிவாவின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படம் 2015 தீப ஒளித்திருநாளன்று வெளியானது.[4] இப்படத்தின் இயக்குநர் சிவா, அஜித் குமார் நடிப்பில் ஏற்கெனவே வெளியான வீரம் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அஜித் குமாரின் ஆரம்பம், என்னை அறிந்தால் திரைப்படங்களை தயாரித்த ஏ. எம். ரத்னம் தயாரித்துள்ளார்.[5] இப்படம் 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அதிகார பூர்வ பெயரிடுவதற்கு முன்னதாக இத்திரைப்படம் தல 56 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. இப்படம் வசூல் வேட்டை புரிந்து, விநியோகஸ்தர்களுக்கு 30 சதவிகிதம் வரை லாபம் ஈட்டி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
வேதாளம் | |
---|---|
இயக்கம் | சிவா |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | அஜித்குமார் சுருதி ஹாசன் லட்சுமி மேனன் சூரி |
ஒளிப்பதிவு | வெற்றி |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிசு |
வெளியீடு | 10 நவம்பர் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹68 கோடி (US$8.5 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹155 கோடி (US$19 மில்லியன்)[2] |
நடிகர்கள்
- அஜித் - கணேஷ்/ வேதாளம்
- சுருதி ஹாசன் - சுவேதா
- லட்சுமி மேனன் - தமிழ்
- அஸ்வின் - அர்ஜுன்
- சூரி - லக்ஷ்மி தாஸ்
- கபீர் துகான் சிங் - அபினய்
- ராகுல் தேவ் - ரத்னா பாய்
- அனிகெத் சவுகான்- அனிகெத்
- வித்யுலேகா ராமன்
- பாலா சரவணன்
- சுவாமிநாதன்
- ராஜேந்திரன் - "கொல்கத்தா" காளி
- மயில்சாமி
- வாசு விக்ரம்
- கோவை சரளா
- மன்சூர் அலி கான்
- நாகிநீது
- ஜாஸ்பர்
- ரமேஷ் திலக்
- யோகி பாபு
- மீரா கிருஷ்ணன்
பாடல்கள்
அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.[6]
வேதாளம் | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 16 அக்டோபர் 2015 | |||
ஒலிப்பதிவு | 2015 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | சிறீ சாய்ராம் கிரியேசன்சு | |||
அனிருத் ரவிச்சந்திரன் காலவரிசை | ||||
|
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | உருவாக்கம் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "வீர விநாயகா" | விவேகா | அனிருத், விஷால் சேகர் | 4:23 | ||||||
2. | "டோன்ட் யூ" | மதன் கார்க்கி | சுருதி ஹாசன், சக்திசிறீ கோபாலன் | 4:58 | ||||||
3. | "உயிர் நதி கலங்குதே" | விவேகா | ரவி சங்கர் | 3:05 | ||||||
4. | "தெறி தெறி தீம்" | சிவா | அனிருத் | 1:52 | ||||||
5. | "ஆலுமா டோலுமா" | ரோகேஷ் | அனிருத், பாத்ஷா | 4:20 |
மேற்கோள்கள்
- ↑ "Vedalam (Vedhalam) box office collection: Ajith's film heavily affected by Chennai flood". International Business Times. Dec 7, 2015. http://www.ibtimes.co.in/vedalam-vedhalam-box-office-collection-ajiths-film-heavily-affected-by-chennai-flood-658331.
- ↑ "Top grossing Tamil movies in 2015". Indian Movie Stats. Dec 15, 2015 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151126074717/http://www.indianmoviestats.com/tamil/top-grossing-films-2015/.
- ↑ "Vedhalam first look: Ajith oozes style and charisma in a rugged salt and pepper avatar!". http://www.bollywoodlife.com/news-gossip/vedhalam-first-look-ajith-oozes-style-and-charisma-in-a-rugged-salt-and-pepper-avatar/. பார்த்த நாள்: செப்டம்பர் 24, 2015.
- ↑ http://www.bollywoodlife.com/news-gossip/mega-diwali-clash-its-ajiths-thala-56-versus-kamal-haasans-thoongavanam-versus-dhanushs-vip-2/
- ↑ http://cinema.dinamalar.com/tamil-news/35800/cinema/Kollywood/Thala-56-title-name-announced-in-August-15.htm
- ↑ http://tamil.filmibeat.com/news/thala-56-audio-rights-sold-out-035093.html