வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை

வீ. தோ. பொ. த.
ஆறுமுகபிள்ளை
வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை.jpg
முழுப்பெயர் சாஸ்திரி
வீமாச்சியார்
ஆறுமுகபிள்ளை
பிறப்பு ஆறுமுகபிள்ளை

1822
துறைநீலாவணை,
மட்டக்களப்பு,
இலங்கை

மறைவு 1908
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது மட்டக்களபின்
மிகமூத்த
பல்துறை அறிஞர்
பெற்றோர் சாஸ்திரி
வீமாச்சியார்
கண்ணம்மை
வாழ்க்கைத்
துணை
தெய்வானை


வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை (1822-1908) இலங்கை, மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த பல்கலை அறிஞர். இவர் எழுத்தாளர்களான எஸ். முத்துக்குமாரன், சைவப்புலவர் எஸ். தில்லைநாதன் என்பவர்களது பூட்டன் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1822 இல் துறைநீலாவணைப் பிரதேசத்தில் சாஸ்திரி வீமாச்சியார் என்பவருக்கும், கண்ணம்மை என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். பண்டைய வழக்கின்படி எழுதப்பட்ட இவரது பெயர் முதலெழுத்துக்கள் குறிப்பது வீமாச்சியார் தோம்புதோர் பொலிஸ்த் தலைமை ஆறுமுகபிள்ளை என்பதாகும். அக்காலத்தில் ஒருவர் ஊதியம் பெறாமல் வகிக்கின்ற அரசாங்கக் கௌரவப் பதவியை அவரது பெயர் முதலெழுத்துக்களுடன் சேர்த்து எழுதுவது வழக்காகும். இவரது தந்தையார் அக்காலத்தில் கண்டி அரசனின் பிரதானிகளில் ஒருவர்.

படைப்புகள்

இவர் பல நூல்களை ஆக்கியும், அரிய பல நூல்களைப் பிரதிபண்ணியும் உள்ளார். இவரது படைப்புகள் ஓலைச் சுவடிகளிலேயே காணப்பட்டன. அவற்றுட் சில தற்காலத்தில் அச்சுருப் பெற்றுள்ளன.

ஆக்கிய நூல்கள்

கீழ்க்குறிப்பிடப்படும் நூல்கள் அவரால் ஆக்கப்பட்ட நூல்களுள் தற்காலத்தில் ஓலைச் சுவடிகளில் பெறக்கூடியதாயிருப்பது. இன்னும் பல நூல்கள் தற்காலத்திற் பெறமுடியவில்லை.

  1. மண்டூர் முருகன் காவடி விருத்தம் (1848)
  2. துறைநீலாவணைக் கண்ணகையம்மன் ஊர்சுற்றுக்காவியம் (1845)
  3. துறைநீலாவணைக் கண்ணகையம்மன் சின்னக்காவியம் (1852)
  4. வைரவர் தோத்திரம் (1840-இவரது கன்னிப்படைப்பு)
  5. வதனமார் தோத்திரம் (1850)
  6. கதிர்காமக் கந்தன் பேரின்பக் காதல் (1862)
  7. சோதிட மாலை (1860)
  8. விட வைத்தியத் தொகுப்பு (1868)

பிரதி பண்ணிய நூல்கள்

இவரால் பல அரிய நூல்கள் பிரதிபண்ணப்பட்டுள்ளன. இவர் பிரதிபண்ணிய கண்ணகி வழக்குரை ஓலைச்சுவடி இன்றும் துறைநீலாவணைக் கண்ணகையம்மன் ஆலயத்தின் வழிபாட்டுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. இது இவரது சந்ததியினரால் பாதுகாக்கபட்டு வருகின்றது.

  1. காசி காண்டம்
  2. நைடதம்
  3. கண்ணகி வழக்குரை
  4. கண்ணகி குளிர்ச்சிக்கதை
  5. கம்சன் அம்மானை
  6. வைகுந்தம்மானை
  7. வள்ளியம்மானை
  8. மகாபாரதம்
  9. திருச்செந்தூர்ப்புராணம்
  10. கந்தபுராணம்
  11. சித்திரக்கதை (சித்திரபுத்திரனார் கதை)
  12. சோதிட நூல்கள்
  13. வைத்திய வாகடம்
    1. சித்த வைத்திய வாகடம்,
    2. விட வைத்திய வாகடம்,
    3. மாட்டு வைத்திய வாகடம்,
    4. பிள்ளைப் பேற்று வைத்தியம்,
    5. சிறுபிள்ளை வாகடம்
  14. சோதிட நிகண்டு
  15. வைத்திய அகராதி
  16. பிள்ளையார் கதை

பிரதிபண்ணிய பத்ததிகள்

  1. கண்ணகி பத்ததி (தெய்வேந்திரன் பத்ததி, முனி பத்ததி, கூனற் பத்ததி, கொம்புப் பத்ததி)
  2. மாரியம்மன் பத்ததி
  3. காளி பத்ததி
  4. வதனமார் பத்ததி
  5. வைரவர் பத்ததி
"https://tamilar.wiki/index.php?title=வீ._தோ._பொ._த._ஆறுமுகபிள்ளை&oldid=2811" இருந்து மீள்விக்கப்பட்டது