வீரப்பன் வீராத்தான்

வீரப்பன் வீராத்தான் அல்லது வீ. வீரப்பன் (ஆங்கிலம்: Veerappen Veerathan அல்லது V. Veerappen; மலாய்: Veerappen Veerathan) என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி; மற்றும் மலேசிய வழக்கறிஞர் ஆவார்.

மாண்புமிகு
வீரப்பன் வீராத்தான்
Veerappen Veerathan
நாடாளுமன்ற உறுப்பினர்
for
பதவியில்
1959–1964
நாடாளுமன்ற உறுப்பினர்
for சோசலிச கூட்டணி
பதவியில்
1969–1974
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிகெராக்கான்
வேலைவழக்கறிஞர்
அரசியல்வாதி

இவர் டாக்டர் லிம் சோங் இயூ (Dr. Lim Chong Eu), டான் சீ கூன் (Dr. Tan Chee Khoon) மற்றும் டாக்டர். சையத் உசைன் அலாத்தாஸ் (Dr. Syed Hussein Alatas) ஆகியோருடன் இணைந்து கெராக்கான் (ஆங்கிலம்: Malaysian People's Movement Party; மலாய்: Parti Gerakan Rakyat Malaysia (Gerakan); கட்சியை நிறுவியவர். அதற்காக மலேசிய அரசியலில் நன்கு அறியப் பட்டவரும் ஆவார்.[1]

பொது

1972-ஆம் ஆண்டு, அவர் கெராக்கான் கட்சியில் இருந்து வெளியேறி, மலேசிய சமூக நீதிக் கட்சி (ஆங்கிலம்: Malaysian Social Justice Party (PEKEMAS); மலாய்: Parti Keadilan Masyarakat Malaysia); என்ற ஒரு புதிய கட்சியை நிறுவினார்.[2]

1959-ஆம் ஆண்டு, மலேசியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பினாங்கின் செபராங் செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அந்தத் தேர்தலில், மலாயா தொழிலாளர் கட்சியின் (Labour Party of Malaya) சார்பில் போட்டியிட்டார்.

மலேசிய மக்கள் இயக்கக் கட்சி

1969 பொதுத் தேர்தலில், மீண்டும் அதே பினாங்கு செபராங் செலாத்தான் தொகுதியில் கெராக்கான் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மலேசிய அரசியலில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மாண்புமிகு வீரப்பன் மிகவும் பிரபலமானவர். அதே வேளையில் மலேசிய இந்தியர்களின் செல்வாக்கப் பெற்றவர். இவருடைய பெயரில் வீரப்பன் சாலை (Jalan Veerappan, Bukit Panchor) என்று பினாங்கில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.[3]

மேற்கோள்

மேலும் காண்க

மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

"https://tamilar.wiki/index.php?title=வீரப்பன்_வீராத்தான்&oldid=25164" இருந்து மீள்விக்கப்பட்டது