வீரத்தாலாட்டு
வீரத்தாலாட்டு (Veera Thalattu) என்பது 1998 ஆம் ஆண்டின் இந்திய தமிழ்- மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் முரளி, வினிதா , குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், ராஜ்கிரண், ராதிகா , லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கான இசையை இளையராஜா மேற்கொண்டார். இப்படம் 1998 ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[1]
வீரத்தாலாட்டு | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ராஜ்கிரண் வினிதா குஷ்பூ ராதிகா |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | ஹரி-பழனி |
கலையகம் | கஸ்தூரி மங்கா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 10 ஏப்ரல் 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பாண்டியனாக முரளி
- பாண்டியனின் தந்தையாக ராஜ்கிரண்
- வினிதா
- குஷ்பூ
- பாண்டியனின் தாயாக ராதிகா
- பாண்டியனின் வளர்ப்பு தாயாக லட்சுமி
- சந்தான பாரதி
- மணிவண்ணன்
- ஆர். சுந்தர்ராஜன்
- சகீலா
தயாரிப்பு
படமானது தயாரிப்பு பணியின்போது தாமதங்களைக் கண்டது. படத்தை முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது.[2]
பின்னணி இசை
இளையராஜா இசையமைக்க அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[3]
- வாடிப்பட்டி - கங்கை அமரன், எஸ். பி. சைலஜா
- சாந்து பொட்டு - அருன்மொழி, சுவர்ணலதா
- பட்டபகல் - மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா
- படிக்கட்டுமா - எஸ். ஜானகி
- கும்பாபிசேகம் - எஸ்.பி.பி., சித்ரா
- கிளியபோல - கங்கை அமரன், எஸ். பி. சைலாஜா
- கத போலா தோனும் - இளையராஜா
- அம்மன் கோவில் - கங்கை அமரன், எஸ்.பி. சைலாஜா
- ஆராரோ - ஸ்வர்ணலதா
- ஆளப்பிறந்த மகாராசா - இளையராஜா, கே. எஸ். சித்ரா
வெளியீடு
இந்த படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Indolink.com இணைய தளத்தில் ஒரு விமர்சகர் இது "புதிய போத்தலில் பழைய ஒயின்" என்றும், இயக்குனர் "நாயகனின் தந்தையின்" மரணத்திற்குப் பழிவாங்கும் பழைய கதைக்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.[4]
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222192636/http://movies.indiaglitz.com/watch.php?mid=%7B03A9DDDF-BD9A-4148-9E27-F457D215CD3C%7D.
- ↑ ""P" continued..." இம் மூலத்தில் இருந்து 24 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm.
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0003003
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160103150027/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Veera_Thaalaattu_211518.html.