வீரசேகர சோழன்

வீரசேகர சோழன் (ஆட்சி:1511-1529) பழையாறையிலிருந்து ஆட்சி செய்து வந்த சோழ மன்னனாவான்

வரலாறு

பழையறையில் ஆட்சிசெய்துவந்த வீரசேகர சோழன் தங்கள் மரபினர் இழந்த தஞ்சையை விஜயநகர ஆட்சியில் இருந்து கைப்பற்ற முன்றார். தஞ்சையை மீட்க முயன்று தோல்வியுற்ற, வீரசேகர சோழன் மதுரை சென்று அங்கு விஜயநகர பேரரசிற்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்த சந்திரசேகர பாண்டியனை வென்று 1529இல் மதுரையில் ஆட்சி அமைத்தான். விரட்டப்பட்ட சந்திரசேகர பாண்டியன் கிருஷ்ணதேவராயரிடம் முறையிட்டு உதவி கோர அவர் தளபதிநாகம நாயக்கன் தலைமையில் சோழனிடம் இருந்து மதுரையை மீட்கப் படையுடன் அனுப்பப்பட்டார். சோழனிடம் இருந்து மதுரையை மீட்டாலும் அதனைப் பாண்டியனிடமும் கொடுக்காமல் நாகம நாயக்கர் தங்கள் ஆட்சியை நிறுவினார்[1]. வீரசேகர சோழன் போரில் கொல்லப்பட்டு சோழனின் இளைய மகன், மகள் இருவரும் நாடுகடத்தப்பட்டனர்.

மேற்கோள்கள்

  1. தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4. இராவ்சாகிப் திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
"https://tamilar.wiki/index.php?title=வீரசேகர_சோழன்&oldid=129966" இருந்து மீள்விக்கப்பட்டது