வீரகனூர்

வீரகனூர் (Veeraganur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வீரகனூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் கங்கவள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,624 (2011)

516/km2 (1,336/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 22.51 சதுர கிலோமீட்டர்கள் (8.69 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/veeraganur

அமைவிடம்

வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 22 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் கங்கவள்ளி 12 கிமீ; மேற்கில் சின்னசேலம் 32 கிமீ; தெற்கில் பெரம்பலூர் 43 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

22.51 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 72.93% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1026 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

  • அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மதுர வீரன் திருக்கோவில், அண்ணா நகர், வீரகனூர்
  • அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன், திருச்சி மெயின்ரரோடு,
  • ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
  • பொன்னாளியம்மன் கோயில்
  • கஜவரதராஜ பெருமாள் கோயில்
  • கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
  • பெரியாயி கோயில்,
  • நடுவீதி மதுரவிநாயகர் ,
  • மாரியம்மன் கோயில்,
  • காளியம்மன் கோயில்
  • தென்கரை மாரியம்மன் கோவில் -(கவின் இல்லம் அருகில்)
  • ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன்கோயில்
  • சொக்கனூர் மாரியம்மன் கோவில்

கல்வி

  • இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலை பள்ளி, ஒரு இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளிகள் என கிட்டத்தட்ட 5 அரசு பள்ளிகள் உள்ளன.

போக்குவரத்து

  • வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரயில் நிலையம்

  • ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூர், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் இரயில்கள் இயங்குகிறது.
  • சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள், சேலம் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி சேலத்தில் , ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகிறது.
  • அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Veeraganur Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=வீரகனூர்&oldid=125411" இருந்து மீள்விக்கப்பட்டது