வி. வி. ஸ்ரீநிவாசன்
வி. வி. ஸ்ரீநிவாசன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் நிவாஸ் என்ற பெயரில் ஓவியங்களை வரைந்துள்ளார். பிறகு ஓவியர் சந்திராவின் அறிவுறுத்தலின் படி 'லதா' என்ற பெயரில் ஓவியங்களை வரைந்துள்ளார்.
முத்துசுவாமி தீட்சிதரின் ஓவியம்
முத்துசாமி தீட்சிதரின் பிரபலமான தபால்தலை ஓவியத்தினை வரைந்தவர் ஸ்ரீநிவாசன். இப்படத்தினை தீட்சிதரின் தம்பி பாலுசாமி தீட்சிதருக்காக வரைந்துள்ளார். பிறகு பாலுசாமி தீட்சிதரிடம் அனுமதி பெற்று தபால் துறையினர் இந்த ஓவியத்தை பயன் படுத்தியுள்ளனர்.