வி. சேதுராமன்
வி. சேதுராமன் (V. Sethuraman, 13 செப்டம்பர் 1982 − 26 மார்ச் 2020) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார். இவர் சேது என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகிறார்.[2] இவர் 2012 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.[3]
வி. சேதுராமன் | |
---|---|
பிறப்பு | 13 செப்டம்பர் 1985 |
இறப்பு | 26 மார்ச்சு 2020 | (அகவை 34)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சேது |
பணி | மருத்துவர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2013 - 2020 |
வாழ்க்கைத் துணை | உமையாள்[1] |
கல்வி மற்றும் தொழில்
சேதுராமன் எம். பி. பி. எஸ், எம். டி படித்து தோல் மருத்துவராகப் பணியாற்றினார். லேசர் மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.[4]
திருமணம்
சேதுராமன், உமையாள் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.[4]
இறப்பு
சேதுராமன் மார்ச் 26, 2020இல் மாரடைப்பு காரணமாக சென்னையில் இறந்தார்.[4]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | சிவா | |
2016 | வாலிப ராஜா | கார்த்திக் | |
2017 | சக்க போடு போடு ராஜா | சரவணா | |
2019 | 50/50 | சேது |
ஆதாரங்கள்
- ↑ ChennaiMarch 27, India Today Web Desk; March 27, 2020UPDATED:; Ist, 2020 10:06. "Kanna Laddu Thinna Aasaiya actor Sethuraman dies at 36 in Chennai". India Today.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Meeting a star behind the hospital screen". பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
- ↑ Malathi Rangarajan (January 9, 2013). "Laughter, at another's expense". பார்க்கப்பட்ட நாள் February 4, 2019.
- ↑ 4.0 4.1 4.2 "நடிகர் சேதுராமன் திடீர் மரணம்: திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சி". இந்து தமிழ் (27 மார்ச், 2020)