விஷால்
விஷால் கிருஷ்ணா ரெட்டி (Vishal, பிறப்பு:29 ஆகத்து 1977)[1] தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, ஜானகி தேவி, விஷாலின் தாய் தந்தையாவர். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.[2][3]
விஷால் | |
---|---|
பிறப்பு | விஷால் கிருஷ்ணா ரெட்டி ஆகத்து 29, 1977 மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
தொழில்
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
விஷால் 1977 அகத்து 29 இல் பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தையும் தாயும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளர்களாக விளங்கினர். தற்போது இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் டான் போஸ்கோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார். இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.[4]
அரசியல்
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெ. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அத்தொகுதி காலியாக இருந்தது. அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-இல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.[5]
திரைப்பட வரலாறு
எண் | ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | 2004 | செல்லமே | ரகுனாதன் | |
2 | 2005 | சண்டக்கோழி | பாலு | |
3 | திமிரு | கணேஷ் | ||
4 | 2006 | சிவப்பதிகாரம் | சத்திய மூர்த்தி | |
5 | 2007 | தாமிரபரணி | பரணிபுத்திரன் | |
6 | மலைக்கோட்டை | அன்பு | ||
7 | 2008 | சத்தியம் | சத்தியம் | |
8 | 2009 | தோரணை | முருகன் | |
9 | 2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை | கார்த்திக் | |
10 | 2011 | அவன் இவன் | வால்ட்டர் வணங்காமுடி | |
11 | வெடி | பிரபாகரன் | ||
12 | 2013 | பாண்டிய நாடு | ||
13 | 2014 | நான் சிகப்பு மனிதன் | ||
14 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | சிறப்புத்தோற்றம் | ||
15 | பூஜை | வாசு | தயாரிப்பும் இவரே | |
16 | 2015 | ஆம்பள | சரவணன் | தயாரிப்பும் இவரே |
17 | மத கஜ ராஜா | தாமதமாகி உள்ளது[6] | ||
18 | 2016 | மருது | மருது | |
19 | 2016 | கதகளி | ||
20 | 2016 | கத்தி சண்டை | ||
21 | 2017 | துப்பறிவாளன் | ||
22 | 2018 | சண்டக்கோழி 2 | பாலு | |
23 | 2018 | இரும்புத்திரை |
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Vishal celebrates his birthday.". 2015-11-18 இம் மூலத்தில் இருந்து 2015-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151118044809/http://www.sify.com/movies/vishal-celebrates-his-birthday-imagegallery-kollywood-ni3l1pjficcsi.html.
- ↑ "நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விஷால் சாதித்தது என்ன? – இயக்குனர் சேரன் கேள்வி" இம் மூலத்தில் இருந்து 2017-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170424204114/http://polimernews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE/.
- ↑ "Vishal Film Factory launched". 2021-08-22 இம் மூலத்தில் இருந்து 2021-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210822041936/https://www.sify.com/movies/vishal-film-factory-launched--imagegallery-kollywood-nfpmawfcdicsi.html.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Chennai-should-have-a-casino-too-Vishal/articleshow/19494028.cms?
- ↑ https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vishal-nomination-paper-accepts-by-election1-304002.html
- ↑ "It's Aambala before Madha Gaja Raja". Behindwoods. 14 July 2014. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/vishal-is-the-aambala.html.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விஷால்
- முகநூலில் விஷால்
- {{Twitter}} template missing ID and not present in Wikidata.