விழுதுகள் (சஞ்சிகை)

விழுதுகள் சஞ்சிகை (இதழ்) சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பற்றி சமூகத்திற்கு எடுத்துக்காட்டி அவர்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சஞ்சிகையாகும் (இதழாகும்). இது இலங்கையின் மட்டக்களப்பு நகரிலிருந்து இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகின்றது.

தனிச்சிறப்பான தேவையுடையவர்கள் நம்மிடையே வாழுகின்ற ஒரு தனி வாழ்இயல்புகளை உடைய சமூக அமைப்பினராவார். அவர்களுக்கென ஒரு பண்பாடு உள்ளது. தனிக் கலாச்சாரம் உண்டு. சைகைமொழி என்று ஒன்று உண்டு. இவைகளைக் கொண்டு சமுதாயத்தில் அவர்கள் தங்கி வாழவேண்டியவர்கள் எனும் மனித நிலைப்பாடு நம்மத்தியில் (நம்மிடையே) உண்டு. ஆனால் அவர்கள் வெறுமனே தங்கி வாழவேண்டியவர்களும் அல்ல. அவர்கள் சமூகத்திற்கு சுமையானவர்களும் அல்ல எனத் தங்களை அடையாளப்படுத்தும் அளவிற்கு, சிறப்புத் தேவையுள்ளவர்கள் விழித்தெழுந்திருக்கிறார்கள். இவ்வாறு சிறப்புத் தேவையுடையோர் பற்றிய விடயங்களைத் தாங்கி வெளிவருகிறது விழுதுகள் சஞ்சிகை (இதழ்).

விழுதுகள் சஞ்சிகையின் ஆசிரியர் கு. குணறுபேஸ். இவர் ஒரு பத்திரிகையாளர் என்பதுடன் கலை இலக்கியவாதியும் கூட. அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வசித்து வருகின்றார். மட்டக்களப்பு செவிடர் பணிமனையினர் இதனை வெளியிட்டு வருகின்றனர்.

"https://tamilar.wiki/index.php?title=விழுதுகள்_(சஞ்சிகை)&oldid=14991" இருந்து மீள்விக்கப்பட்டது