விழி மூடி யோசித்தால் (திரைப்படம்)

விழி மூடி யோசித்தால் (vizhimoodi yosiththaal) 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிவியல் புனைகதை மற்றும் அதிரடி காதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகையான உணர்வு அறிவுத்திறனை அடிப்படையாக கொண்டது. இத்திரைப்படத்தை கே. ஜி. செந்தில் குமார் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் கே. ஜி. செந்தில் குமார் மற்றும் நிகிதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3] "விழி மூடி யோசித்தால்" போன்ற சில தமிழ் திரைப்படங்கள் மாத்திரமே "ஆரோ11.1" ஒலித்தொழிநுட்பத்தை பயன்படுத்தியுள்ளன.

விழி மூடி யோசித்தால்
Theatrical Release Poster
இயக்கம்கே. ஜி. செந்தில் குமார்
தயாரிப்புகே. ஜி. செந்தில் குமார்
கதைகே. ஜி. செந்தில் குமார்
இசைபீ. அத்திப்
நடிப்புகே. ஜி. செந்தில் குமார்
நிகிதா
ஊர்வசி
பவர் ஸ்டார் சீனிவாசன்
பாலா சிங்
அமிற் பாக்ரவ்
பானு ஸ்ரீ மேக்ரா
மிஷா கோஷல்
ஒளிப்பதிவுகோபசு
படத்தொகுப்புகே. மாருதி
கலையகம்ருவிஸ்ரர் பிலிம்ஸ்
விநியோகம்ருவிஸ்ரர் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 21, 2014 (2014-11-21)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் கேஜியிற்கு (கே. ஜி. செந்தில் குமார்) தனது வாழ்வில் 5 நிமிடங்கள் முன்னோக்கி அறியும் திறன் இருந்தது. ஆனால் இத்திறன் அவன் குடிபோதையில் அல்லது நித்திரையில் இருந்தால் தொழிற்படாது. இது அவனுக்கு அவனுடைய காதலி நிக்கி (நிக்கிதா) வரும்வரை தெரியாது. ஆனால் அவள் நான்கு பேர் கொண்ட தீவிரவாத கும்பலால் அவன் கண்முன்னே கொல்லப்பட்டாள். ஆனால் அப்போது அவன் மது அருந்தியிருந்தான். அதன்பிறகே மது அருந்தினால் தன்னால் காலத்திற்கு முன் சென்று நடப்ளவற்றை பார்க்க முடியாது எனபது புரிந்தது. மேலும் மது அருந்தாமல் விட்டிருந்தால் நிக்கியை காப்பாற்றியிருக்கலாம் என்பதும் புரிந்தது. கே. ஜி. நிக்கியை கொன்ற அந்த நான்கு தீவிரவாதிகளையும் ஒவ்வொருவராக கொன்றான். அதன்பிறகே அத்தீவிரவாத கும்பலின் பாரிய செயல்திட்டமான ஒவ்வொரு மாநிலங்களிலும் (தமிழ் நாடு உப்பட) பொருளாதாரத்தை மந்தப்படுத்தும் யுத்தி ஒன்றை கே. ஜி. அறிந்து கொள்கிறான். ஆனால் அவர்களின் திட்டத்தை முறியடித்து தமிழ் நாட்டை இழப்பில் இருந்து காப்பதோடு தனக்கு கிடைத்த வரம் பற்றி பெருமிதம் கொள்கிறான். அதன்பின்னர் சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தனது திறனை பயன்படுத்துகின்றான்.

நடிகர்கள்

  • கே. ஜி. செந்தில் குமார் - கே. ஜி.
  • நிகிதா - நிகி
  • ஊர்வசி - கே. ஜியின் தாய்
  • பவர் ஸ்டார் சீனிவாசன்- கல்லூரி அலும்னி
  • பாலா சிங் - பாய்
  • அமிற் பாக்ரவ் - பிரதான வில்லன்
  • பானு ஸ்ரீ மேரா - மேகா
  • மிஷா கோசல் - ஹசினி
  • மகேஷ் சுப்பிரமணியம்

இசை

இத்திரைப்படத்திற்கு பீ. அத்திப் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் உள்ள ஆறு பாடல்களும் நவம்பர் 2, 2014இல் வெளியிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்