விளம்பி நாகனார்
விளம்பி நாகனார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக்கடிகையை எழுதியவர் ஆவர்.[1]
விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாருமுளர். இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 வே. ரா. மாதவன், தொகுப்பாசிரியர் (2001). நான்மணிக்கடிகை மூலமும் பழைய உரையும். தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7090-291-6. https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011746_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.pdf.