விளக்குநிலை
விளக்குநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வேலும் வேற்றலையும் விலங்கா தோங்கியவாறு போலக் கோலொடு விளக்கு மொன்றுபட் டோங்குமா றோங்குவதாகக் கூறுவது விளக்கு நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136
உசாத்துணைகள்
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்