வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட்

வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் (William James Durant, நவம்பர் 5 1885 - நவம்பர் 7, 1981) என்பவர் அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர், மெய்யியல் பேராசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட்
Ariel and Will Durant.jpg
இயற்பெயர் வில்லியம் டியுரண்ட்
பிறந்ததிகதி (1885-11-05)நவம்பர் 5, 1885
இறப்பு நவம்பர் 7, 1981(1981-11-07) (அகவை 96)
பணி எழுத்தாளர், வரலாற்றாசிரியர், மெய்யியல் பேராசிரியர், ஆசிரியர்
தேசியம் அமெரிக்கர்
கல்வி நிலையம் புனித பீட்டர் கல்லூரி (B.A., 1907)
கொலம்பியா பல்கலைக்கழகம் (முனைவர் பட்டம் (மெய்யியல்), 1917)
வகை புனைவிலி (Non-fiction)
கருப்பொருள் வரலாறு, மெய்யியல், சமயம்
இலக்கிய இயக்கம் மெய்யியல்,...
துணைவர் ஏரியல் டியுரண்ட்
பிள்ளைகள் ஈத்தல் டியுரண்ட்

பிறப்பும் வாழ்க்கையும்

அமெரிக்காவில் மசாசூசட் மாநிலத்தில் வடக்கு ஆடம்சு என்னும் ஊரில் பிரெஞ்சு கனடிய பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தார். நியூயார்க்கில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்தபோது, மாணவியான ஏரியல் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

படிப்பும் படைப்புகளும்

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தத்துவவியலில் ஆய்வுப் பட்டம் பெறுவதற்குப் பயிலும்போதே வில்லியம் டியுரன்ட் "தத்துவமும் குமுகச் சிக்கல்களும்" என்னும் தம் முதல் நூலை எழுதினார். தத்துவத்தை எளிமையாக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதினார். அந்நூலின் பெயர் "தத்துவத்தின் கதை" என்பது ஆகும். "தத்துவத்தின் கதை" பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு 40 இலக்கம் படிகள் 30 ஆண்டுகளில் விற்பனை ஆயின.

1935 முதல் 1975 வரை "நாகரிகத்தின் கதை" என்னும் நூலை 11 தொகுதிகளாக வெளியிட்டு உலகப் புகழ் பெற்றார். வில்லி டியுரண்டும் அவர் மனைவி ஏரியலும் கூட்டாக எழுதி இந்நூலை வெளியிட்டார்கள். ஒரே ஒரு புதினம் அவரால் எழுதப்பட்டது.

விருதுகள்

வெளி இணைப்புகள்