வில்லக விரலினார்

வில்லக விரலினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 370 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

வில்லக விரல்

வில்லைப் பிடித்திருக்கும் விரல் போல் தலைவன் தலைவியைப் பிடித்துத் தழுவிக்கொண்டிருக்கிறான் என்று இவர் குறிப்பிடும்போது 'வில்லக விரல்' என்னும் தொடரைக் கையாளுகிறார். அதனால் இப்புலவரை வில்லக விரலினார் என்று பெயர் சூட்டி அழைக்கலாயினர்.

பாடல் சொல்லும் செய்தி

வில்லைப் பிடிக்கும்போது ஒரு கை வில்லின் வளைவைப் பற்றியிருக்கும். அதுபோல அவன் அவளை வளைக்கிறானாம். மற்றொரு கை நாணைப் பற்றியிருக்கும். அதுபோல அவன் அவளது உணர்ச்சி நரம்புகளை இழுக்கிறானாம். - இது அவனோடு அமர்ந்திருக்கும் காலத்தில் இருமருங்கிலும் நிகழ்ந்தது.

அவன் நெஞ்சைத் தழுவிக்கொண்டிருக்கும்போது இந்த இரு நிலைகளும் ஒன்றாகி இன்பம் என்னும் ஒரே பிடிப்பு மறுங்கில் கிடக்கிறாளாம். - தலைவி சொல்கிறாள்.

வேறு பார்வை - பரத்தை சொல்கிறாள்.

தலைவன் தன் மனையில் இருக்கும்போது அவன் தன் மனைவியையும், பரத்தையாகிய தன்னையும் வில்லைப் பற்றியிருக்கும் இரு கை போலப்பற்றி நிற்கிறானாம்.

தன் வீட்டுக்கு வந்ததும் மனைவியை மறந்து தன்னையே பற்றிநிற்கிறானாம்.

"https://tamilar.wiki/index.php?title=வில்லக_விரலினார்&oldid=12725" இருந்து மீள்விக்கப்பட்டது