விறகு விற்ற படலம்

திருவிளையாடற் புராணத்தில் 41 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2031 -2100) விறகு விற்ற படலம் உள்ளது[1]. ஒரு புலவர் எல்லா நாட்டிலுள்ள புலவர்களையும் பாட்டில் வென்று பாண்டிய நாட்டிற்கு வருகிறார். "தன்னைப் பாட்டில் வென்றால் தான் பாண்டிய நாட்டிற்கு அடிமை என்றும், இல்லையேல் தன் பாட்டிற்குப் பாண்டிய நாடு அடிமை" என்று அந்தப் புலவர் பாண்டிய மன்னனிடம் கூறினார். அதனால் பாண்டிய நாட்டைக் காக்கும் பொருட்டு சிவபெருமானே விறகு விற்கும் வியாபாரியாக வந்து புலவரின் அகந்தையை அடக்குகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விறகு_விற்ற_படலம்&oldid=18437" இருந்து மீள்விக்கப்பட்டது