விராதன்

விராதன் (Virādha) வால்மீகி இராமாயண இதிகாசம் கூறும் தண்டகாரண்யத்தில் வாழ்ந்த அரக்கர் ஆவார். வனவாசத்தின் போது சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன் சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம-இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.[1][2]

எவ்வித ஆயுத்தாலும் கொல்லபட இயலாத வரம் பெற்ற விராதனின் இரு கைகளை வெட்டிய இராமன், பெரிய குழியில் தள்ளி இலக்குமணன் உயிரோடு புதைத்தல்

வரலாறு

விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. [3][4]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=விராதன்&oldid=38451" இருந்து மீள்விக்கப்பட்டது