விமல் குழந்தைவேல்

விமல் குழந்தைவேல்
Vimalkulanthaivael.jpg
முழுப்பெயர் விமல் குழந்தைவேல்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

விமல் குழந்தைவேல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் உள்ள கோளாவில் கிராமத்தில் பிறந்தவர். சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதுபவர்.

தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இப்பொழுது இவர் தணல் நாவலை கொண்டுவர இருக்கிறார்

இவரது நூல்கள்

  • தெருவில் அலையும் தெய்வங்கள் (1988, சிறுகதைகள்)
  • அவளுக்குள் ஒருத்தி (சிறுகதைகள்)
  • அசதி (சிறுகதைகள்)
  • மண்ணும் மல்லிகையும் (1999, நாவல்)
  • வெள்ளாவி (2004, நாவல்)
  • கசகறணம்

விருதுகள்

  • 'கசகறணம்' நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வழங்கும் நாவலுக்கான விருது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விமல்_குழந்தைவேல்&oldid=2810" இருந்து மீள்விக்கப்பட்டது