விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது
விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக சுவாமி விபுலானந்தர் பெயரில் அளிக்கப்படும் தமிழ்ப்பேராய விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருது அயல்நாட்டுப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கவிதை, புனைகதை, நாடகம், கட்டுரை, இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு அயல்நாட்டினர் படைத்து வெளியான சிறந்த நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து, அந்நூலின் நூலாசிரியர் விருதுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1,50,000 பரிசுத் தொகையாகவும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகிறது.[1]
விருது பெற்ற நூல்கள்
ஆண்டு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு | குறிப்புகள் |
---|---|---|---|---|
2013 | அமெரிக்கக்காரி | அ. முத்துலிங்கம் | காலச்சுவடு பதிப்பகம் |
மேற்கோள்கள்
- ↑ தமிழ்ப்பேராய விருதுகள் பரணிடப்பட்டது 2013-01-26 at the வந்தவழி இயந்திரம், திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்