வினோ நோகராதலிங்கம்
சுப்பிரமணியம் நோகராதலிங்கம், அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் (பிறப்பு: சூன் 7, 1963) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
வினோ நோகராதலிங்கம் Vino Noharathalingam | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் 2004–2015 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
பதவியில் 2000–2001 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சுப்பிரமணியம் நோகராதலிங்கம் 7 சூன் 1963 |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
அரசியலில்
டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வினோ நோகராதலிங்கம் அக்டோபர் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டை ஆரம்பித்தன.[3][4] டிசம்பர் 2001 தேர்தலில் இவர் டெலோ சார்பில் ததேகூ வேட்பாளராக போட்டியிட்டுத் தேர்வாகவில்லை.[5][6][7]
ஏப்ரல் 2004 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[8] பின்னர் ஏப்ரல் 2010 தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9][10] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ததேகூ உறுப்பினர்களிடையே ஆறாவதாகத் தெரிவாகி, நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.[11][12][13]
நோகராதலிங்கம் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் மீண்டும் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15][16]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2000 நாடாளுமன்றம்[2] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தெரிவு | ||||
2001 நாடாளுமன்றம் | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு செய்யப்படவில்லை | |||
2004 நாடாளுமன்றம்[8] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2010 நாடாளுமன்றம்[17] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம்[12] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு செய்யப்படவில்லை | |||
2020 நாடாளுமன்றம்[18] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: S. Noharathalingam". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/members-of-parliament/directory-of-members/viewMember/1452. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ 2.0 2.1 "Parliamentary General Election - 2000 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015333/http://www.slelections.gov.lk/pdf/preference2000GE.PDF.
- ↑ D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html.
- ↑ "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑
- ↑ "Tamil Alliance files nominations in East and Vavuniya". தமிழ்நெட். 26 October 2001. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6417. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Parliamentary General Election - 2001 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf.
- ↑ 8.0 8.1 "Parliamentary General Election - 2004 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.
- ↑
- ↑ "General Elections 2010 -- Preferential Votes". Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑
- ↑ 12.0 12.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Preferential Votes". Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Parliamentary General Election - 2010 - Vanni Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections இம் மூலத்தில் இருந்து 13 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035435/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Vanni_pref_GE2010.pdf.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020.