வினா எழுத்து

தமிழ் எழுத்துகளை ஒலி நோக்கில் முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் பாகுபாடு செய்தனர். சுட்டாகவும் வினாவாகவும் பொருள் உணர்த்தும் எழுத்துகளைச் சுட்டெழுத்து வினா எழுத்து எனப் பகுத்துத் தனியே குறிப்பிடலாயினர்.[1][2] வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்து வினாவெழுத்து எனப்படும். இவ்வெழுத்துகள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன.'ஆ','எ','ஏ','ஓ','யா', என்பவை வினா எழுத்துகளாகும்.

சான்று 1:
ஆ, ஏ, ஓ ஆகிய மூன்று எழுத்துகளையும் தொல்காப்பியம் வினா எழுத்து எனக் குறிப்பிடுகிறது.

உணுகா சாத்தா (ஆ) (சாத்தா! நான் உண்ணவா)
உண்கே சாத்தா (ஏ) (சாத்தா! நீ உண்பாயா)
உண்கோ சாத்தா (ஓ) (சாத்தா! நாம் உண்ணலாமா)

இவை பழந்தமிழ் வழக்கு.

சான்று 2:

அவன் செய்தான்.
அவனா செய்தான்.

இத்தொடர்களுள் முதலிலுள்ள தொடர் ஒரு செய்தியைக் குறிக்கிறது. இரண்டாவது தொடர் ஒரு வினாவை எழுப்புகிறது. ஒரு செய்தியை வினாவாக்கிய எழுத்து 'ஆ' எனவே இது வினா எழுத்தாகும்.

வினா எழுத்துகள் இவை எனக் கூறும் நூற்பா

"ஆ, ஏ, ஓ, அம்முன்றும் வினா " - தொல், எழுத்து. 32
" எப்ப்பெயர் முன்னரும்" - தொல், எழுத்து. 123
"யாவென் வினாவும் ஆயியல் திரியாது" - தொல், எழுத்து. 175

வினாவெழுத்து வரும் இடங்களைக் கூறும் நூற்பா

"எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ இரு வழியும் வினாவாகும்மே." - நன்னூல், எழுத்தியல். 67

வினா எழுத்துகளில் 'எ', 'யா' இரண்டும் சொல்லின் முதலில் வரும்.

  • ங்கே?, க்கொற்றன்? யார்?

, இரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

  • உள்ளதா?, இவனோ?

எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்

  • வன்? கள்வனே?

வினா வகைகள்

வினா,

  1. அகவினா
  2. புறவினா

என இருவகைப்படும்.

அகவினா

ஒரு சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும் வினா "அக வினா" எனப்படும். இவ்வெழுத்துகளைச் சொல்லிலிருந்து பிரித்தால், அச்சொல் தனியே பொருள் தராது.

அகவினாவிற்குரிய எழுத்துகள்

  • யா
  • ஏ என்பன.

சான்று:

  • யார்?, யாது?, யாவை?.
  • து?, ங்கே?, ப்படி?, வ்வாறு?, ன்ன?, தற்கு?
  • ன்?, து?

இவை சொல்லாம் நிலையில் இருந்து வினாப்பொருளை உணர்த்தும்.

புறவினா

சொல்லின் புறத்தே நின்று வினாப்பொருளை உணர்த்தும் வினா "புற வினா" எனப்படும். இச்சொற்களில் வினாப் பொருளைத் தரும் எழுத்தை நீக்கினாலும் அச்சொற்கள் தனியே நின்று பொருள்தரும்.

புறவினாவிற்குரிய எழுத்துகள்

இவை எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருளை உணர்த்தும்.
சான்று:

  • இவனா? - இவன் +ஆ
  • அவனே? - அவன் +ஏ
  • யாரோ? - யார் + ஓ

அடிக்குறிப்புகள்

  1. அ இ உ அம் மூன்றும் சுட்டு. தொல்காப்பியம் 31,
  2. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. தொல்காப்பியம் 32

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=வினா_எழுத்து&oldid=20475" இருந்து மீள்விக்கப்பட்டது