விநாயகபுரம், இலங்கை
விநாயகபுரம் (Vinayagapuram) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் அடங்கியுள்ள கிராமம் ஆகும்.[1] ஆரம்ப காலப்பகுதியில் கரையோரக் காணிகளாயிருந்த நிலங்கள் யாவும் அரசினால் தென்னந்தோட்டங்களாக்கப்பட்டு 1959 இல் நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 1962 இல் குடியேற்ற கிராமமாக இருந்த இக்கிராமத்திற்கு விநாயகபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
விநாயகபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 7°08′0″N 81°51′0″E / 7.13333°N 81.85000°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம், இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
பிரதேச செயலகம் | திருக்கோவில் பிரதேச செயலகம் |
இக்கிராமத்தில் 1990 இல் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, அட்டப்பள்ளம், துறைநீலாவணை, கஞ்சிகுடிச்சாறு, களுதாவளை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடியேறி வாழ்கின்றனர்.
கோயில்கள்
இக்கிராமத்தில் 99.99% ஆன மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுகின்றனர். இங்கு பல இந்து ஆலயங்கள் உள்ளன.
- விநாயகபுரம் சிவன் கோயில்
- விநாயகபுரம் சித்தி விநாயகர் கோயில்
- விநாயகபுரம் காளி கோயில்
- விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில்
- பாலக்குடா பாலவிநாயகர் கோயில்
- மங்கைமாரியம்மன் கோயில்
பாடசாலைகள்
- விநாயகபுரம் மகா வித்தியாலயம், திருக்கோவில்
- திகோ/கோரைக்களப்பு சக்தி வித்தியாலயம்
- திகோ/பரமேஸ்வரா வித்தியாலயம்
- விநாயகபுரம் பாலக்குடா பாலவிநாயகர் வித்தியாலயம்