வித்யா படுகொலை

சிவலோகநாதன் வித்தியா (25 நவம்பர் 1996 – 13 மே 2015) என்பவர் அகவை 18 கொண்ட இலங்கைத் தமிழ் மாணவி. இவர் 2015 மே மாதத்தில் இலங்கையின் வடக்கே புங்குடுதீவு என்ற ஊரில் குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.[1][2][3]

சி. வித்யா
பிறப்பு(1996-11-25)25 நவம்பர் 1996
மாங்குளம், இலங்கை
இறப்பு13 மே 2015(2015-05-13) (அகவை 18)
புங்குடுதீவு, இலங்கை
அறியப்படுவதுபடுகொலை

பின்னணி

புங்குடுதீவைச் சேர்ந்த வித்தியாவின் குடும்பம் ஈழப் போர்க் காலத்தில் 1990 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து மல்லாவி near Mankulam in the வன்னிப் பகுதியில் மாங்குளம் அருகேயுள்ள மல்லாவி என்ற ஊரில் குடியேறினர்.[4][5] வித்தியா மாங்குளம் அரச மருத்துவமனையில் 1996 நவம்பர் 25 இல் பிறந்தார்.[4][5] ஆறாம் வகுப்பு வரை நள்ளாறு வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.[5]

ஈழப்போரின் இறுதிக் காலப் பகுதியில், வித்தியா கொழும்பு நகரில் படித்து வந்தார். வித்தியாவின் குடும்பம் வன்னியில் தங்கியிருந்து போர் முடிவடைந்தவுடன் இலங்கை அரசின் "மெனிக் பாம்" எனப்பட்ட தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.[4] 2010 இல் வித்தியாவும் அவரது குடும்பமும் தமது சொந்த ஊரான புங்குடுதீவுக்குத் திரும்பினர்.[4] வித்தியா புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[4][6]

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கேயுள்ள புங்குடுதீவு உட்படவுள்ள தீவுப் பகுதிகள் 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கைக் கடற்படையினரினதும், துணை இராணுவக் குழுக்களின் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தது.[4] இக்காலப் பகுதியில், தீவுப் பகுதிகளில் ஏராளமான பாலியல் வன்முறைகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் பெரும்பாலானவை கடற்படையினராலும் அரச-ஆதரவு ஈபிடிபி துணை இராணுவக் குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டதாக மீதும் குற்றம் சாட்டப்பட்டன.[7] இவற்றில் சாரதாம்பாள் (1999), இளையதம்பி தர்சினி (2005) ஆகியோர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை, மற்றும் அல்லைப்பிட்டிப் படுகொலைகள் (2006) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

நிகழ்வு

வித்தியா 2 கிமீ தொலைவில் உள்ள பாடசாலைக்கு வழக்கமாக தனது மிதிவண்டியில் வேறு இரு பள்ளி மாணவிகளுடன் செல்வார்.[5] ஆனாலும், 2015 மே 13 அன்று, ஏனைய இரு மாணவிகளும் பாடசாலைக்கு செல்லாதததால், வித்தியா தனியே தனது மிதிவண்டியில் காலை 07:25 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டார்.[5][7]

மேற்கோள்கள்

  1. "Outrage in Sri Lanka over teenager's rape and murder". பிபிசி. 20 மே 2015. http://www.bbc.co.uk/news/world-asia-32820033. 
  2. Balachandran, P. K. (22 மே 2015). "Post-War Systemic Breakdown Blamed For Jaffna Rape and Mayhem". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Post-War-Systemic-Breakdown-Blamed-For-Jaffna-Rape-and-Mayhem/2015/05/22/article2827962.ece. 
  3. "Gang-rape prompts protests in Sri Lanka's north". அல் ஜசீரா. 20 மே 2015. http://www.aljazeera.com/news/2015/05/gang-rape-prompts-protests-sri-lanka-north-150520182532004.html. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Diaspora urged to document flow of narcotics into Tamil homeland". தமிழ்நெட். 27 மே 2015. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37788. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Manju, W. K. Prasad (31 மே 2015). "Vithya's final 24 hours - Mother reveals". சிலோன் டுடே. https://www.ceylontoday.lk/89-94313-news-detail-vithyas-final-24-hours-mother-reveals.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Anger in Jaffna over murder of school girl". தமிழ் கார்டியன். 15 மே 2015. http://www.tamilguardian.com/article.asp?articleid=14757. 
  7. 7.0 7.1 Christopher, Chrishanthi (24 மே 2015). "After rape and murder, fear and tension in Jaffna over covert menace to public safety". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/150524/news/after-rape-and-murder-fear-and-tension-in-jaffna-over-covert-menace-to-public-safety-150561.html. 
"https://tamilar.wiki/index.php?title=வித்யா_படுகொலை&oldid=24068" இருந்து மீள்விக்கப்பட்டது