திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்

(விடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் விடையன் என்ற சூரிய குலத்து அரசர் கட்டி வழிபட்ட தலமாதலால் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டது.

தேவாரம் பாடல் பெற்ற
திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருவிடைவாய்
பெயர்:திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:திருவிடைவாசல்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:புண்ணியகோடியப்பர்
உற்சவர்:திருவிடைவாயப்பர்
தாயார்:அபிராமி
தல விருட்சம்:கஸ்தூரி அரளி
தீர்த்தம்:ஸ்ரீ தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்ரா பவுர்ணமி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:முதலாம் குலோத்துங்க சோழர்

அமைவிடம்

கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர் செல்லும் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் திருவிடைவாயில் வழிகாட்டி உள்ளது. அவ்வழியில் 2 கிமீ சென்றால் திருஇடைவாய் (திருவிடைவாய்)என்று அழைக்கப்படும் இத்தலத்தை அடையலாம்.[2]

இறைவன், இறைவி

இத்தலத்தின் இறைவன் புண்ணியகோடியப்பர், இறைவி அபிராமி. இத்தலத்தின் தலவிருட்சமாக கஸ்தூரி அரளி மரமும், தீர்த்தமாக ஸ்ரீ தீர்த்தமும் உள்ளன.

சிறப்புகள்

இத்தலத்திற்கான தேவாரப் பாடல்கள் கிபி 1917ல் கண்டுபிடிக்கப்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 274 என்று பொதுவாக அறியப்பட்டாலும், திருவிடைவாய் திருத்தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 1917 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் எண்ணிக்கை 275 ஆனது.

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=1093
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014

இவற்றையும் பார்க்க