விடிவு (சிற்றிதழ்)

இலங்கையில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த உடத்தலவின்னை எனும் கிராமத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய முத்திங்கள் இதழாகும்.

விடிவு முதலாம் இதழில் தோற்றம் 1979

முதல் இதழ்

  • மே, சூலை 1979.

நிர்வாகம்

இச்சஞ்சிகை கட்டுகஸ்தோட்டை உடத்தலவின்னை மடிகே எனும் முகவரியைக் கொண்டிருந்தது.

வெளியீடு

  • உடத்தலவின்ன மடிகே வை.எம்.எம்.ஏ. வெளியீட்டகம்

ஆசிரியர்

  • தலவின்னையூர் புன்னியாமீன்

உதவியாசிரியர்

  • ஏ.எல்.எம். ஹனிபா

பத்திரிகைக் குழு

  • ஏ. எம். ஜிப்ரி, ஏ. ஆர். எப். பரீல், எம். ஸி. எம். அன்வர், ஏ. ஆர். எம். உவைஸ், யு. எல். எம். பஸீர்.

உள்ளடக்கம்

கலை, இலக்கிய முத்திங்கள் எனக் கூறப்பட்டாலும்கூட விடிவு இதழில் உள்ளடக்கம் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு சார்ந்ததாகவே காணப்பட்டது. இதன் முதல் இதழ் இலங்கை முஸ்லிமகளுக்கு தனிக்கட்சி அவசியம் என்ற சிறப்புப் பேட்டியை முதன்மைப்படுத்தியிருந்தது. அதேபோல புதிய அரசியல் திட்டங்களும், அடிப்படை உரிமைகளும் இலங்கை சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளைப் பாதிப்பது பற்றிய தொடராக்கமும் இடம்பெற்றிருந்தது.

இவ்விதழ்களில் சிறுகதைகள், நிமிடக்கதைகள், கவிதைகள், புதுக் கவியரங்கு, உலக அரசியல், உருவகக் கதை, இலங்கை பெருந்தோட்டத்துறை வரலாறு, பதில்கூறி பரிசு பெறுங்கள், நேர்காணல்கள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் இலங்கையில் முன்னணி எழுத்தாளர்களும், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் எழுதியுள்ளனர்.

"https://tamilar.wiki/index.php?title=விடிவு_(சிற்றிதழ்)&oldid=14780" இருந்து மீள்விக்கப்பட்டது