விஜய் மகேந்திரன்
விஜய் மகேந்திரன், ஒரு எழுத்தாளர் ஆவார். மேலும், பிஸியோதெரபி துறையில் பணியாற்றியுள்ள இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
விஜய் மகேந்திரன் |
---|---|
பிறந்ததிகதி | 1978 |
பிறந்தஇடம் | மதுரை |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துலக வாழ்வு
உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த நகரத்திற்கு வெளியே என்கிற சிறுகதைத் தொகுப்பின் மூலம் எழுத்தாளராக அறியப்பட்டவர். 1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த இவர் 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இப்போது சென்னையில வசித்து வருகிறார். இவரது நகரத்திற்கு வெளியே சிறுகதைத் தொகுப்புக்காக 2011 ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது கிடைத்துள்ளது. கட்டுரைகள், விமர்சனங்கள், இணையம் என்று பன்முக தளத்தில் இயங்கி வரும் இவர், செவ்வி எனும் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார். ஊடுருவல் தற்போது அவர் எழுதி வரும் நாவல் ஆகும்.
எழுதிய நூல்கள்
- இருள் விலகும் கதைகள் (இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு இந்தத் நூலைத் தொகுத்திருக்கிறார்.)
- நகரத்திற்கு வெளியே- சிறுகதை தொகுப்பு( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றது.
இவரது கதைகள் உயிர் எழுத்து கதைகள், சிக்கி முக்கி கதைகள் போன்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட கதைகள் தொகுப்பிற்கும் இவரது கதை தேர்வாகி உள்ளது.