விஜய் ஈஸ்வரன்
விஜய் ஈஸ்வரன் (Vijay Eswaran, பிறப்பு: அக்டோபர் 7, 1960) என்பவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் ஆங்காங்கை தலைமையிடமாக கொண்ட கியூ.ஐ குழும நிறுவனங்களின் நிர்வாக தலைவர் ஆவார்.[2]
விஜய ஈசுவரன் Vijay Eswaran | |
---|---|
பிறப்பு | 7 அக்டோபர் 1960 பினாங்கு, மலேசியா |
தேசியம் | மலேசியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலண்டன் பொருளியல் பள்ளி, தெற்கு இலினோய் பல்கலைக்கழகம் |
பணி | தலைமை இயக்குநர், QI குழுமம் |
சொத்து மதிப்பு | US$500 மில். (2013)[1] |
பெற்றோர் | விஜயரத்தினம் ஈசுவரன், புசுபவதி ஈசுவரன் |
வாழ்க்கைத் துணை | உமையாள் ஈசுவரன் |
வலைத்தளம் | |
விஜய் ஈசுவரன் |
ஆரம்பகால வாழ்க்கை
விஜய் ஈஸ்வரன் 1960 அக்டொபர் 7 ஆம் திகதி பினாங்கில் விஜயரத்தினம் சரவணமுத்து மற்றும் புஸ்பவதி சின்னையா தம்பதியினருக்கு பிறந்தார். இவரது தந்தை விஜயரத்தினம் சரவணமுத்து மலேசியா இந்து இளைஞர் அமைப்பின் நிறுவனர் ஆவார்.[3][4]
விஜய் ஈஸ்வரன் தனது மூன்றாம் நிலைக் கல்வியை இங்கிலாந்தில் சாரதியாக பணி புரிந்தவாறு தொடர்ந்தார்.[5] 1984 ஆம் ஆண்டில் எல்எஸ்இ (இலண்டன் ஸ்கூல் ஒப் எகானமிக்ஸ்) இல் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பிறகு அவர் ஒரு வருடம் ஐரோப்பாவைச் சுற்றி வந்தார்.[6] அவர் தனது பயணத்தின்போது ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு பிரான்சிஸ்கன் மடாலயத்தில் கழித்தார். 1985 ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி அங்கு பைனரி சிஸ்டம் மார்க்கெட்டிங் பயின்றார். மேலும் சிஐஎம்ஏ இல் இருந்து தொழில்முறைச் சான்றிதழ் பெற்றார். 1986 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவுக்குச் சென்று தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். மேலும் ஐபிஎம்மின் துணை நிறுவனமான சிஸ்டமாடிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் போது பகுதிநேர அடிப்படையில் பல்நோக்கு சந்தைப்படுத்துதலில் (எம்எல்எம்) ஈடுபட்டார். 13 வருடங்கள் கழித்து மலேசியாவிற்கு திரும்பி
காஸ்வே குழுமத்தின் அதன் பிலிப்பைன்ஸ் வணிகத்தைத் தொடங்கினார். பல்நோக்கு சந்தைப்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டார்.[6]
க்யூஐ குழுமம்
1998 ஆம் ஆண்டில், ஆசியாவுக்குத் திரும்பிய பின், அவர் ஒரு பல்நோக்கு சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனார்.[7][8] பின்னர் இந் நிறுவனம் க்யூஐ குழுமமாக வளர்ந்து விரிவடைந்தது.[9] பயணம், ஊடகம், தொலைத்தொடர்பு, ஆடம்பரத் தயாரிப்புக்கள், ஆரோக்கியம், பயிற்சி மற்றும் பெருநிறுவன முதலீடுகளை கொண்ட மின்-வணிகம் அடிப்படையிலான கூட்டு நிறுவனம் ஆகும்.[10] க்யூஐ குழுமத்தின் பிராந்திய அலுவகங்கள் ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. மேலும் பத்து நாடுகளில் பரந்த அளவிலான துணை நிறுவனங்களை கொண்டுள்ளது.[11]
க்யூஐ நகரம்
மலேசியாவின் பந்தர் மேரு ராயாவில் க்யூஐ குழுமத்தின் துணை நிறுவனமான விஜய் ஈஸ்வரன் மற்றும் கிரீன் வென்ச்சர் கேபிடல் என்பன 1.2 பில்லியன் மலேசியன் ரிங்கட் செலவில் வணிக மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுக்கான திட்டமொன்றை தொடங்கின.[12][13] இத் திட்டம் 2020 ஆம் ஆண்டில் நிறைவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.[14] இந்த திட்டத்தில் தனியார் மற்றும் பொது மருத்துவ சேவைகளின் கலவையை வழங்கும் ஒரு போதனா மருத்துவமனையும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[15] மேலும் விஜய் ஈஸ்வரன் குவெஸ்ட் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (QIUP) கவுன்சிலின் தலைவராக உள்ளார். 2008 இல் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம் க்யூ நகரத்தின் ஒரு பகுதியாகும். இது பேராக் மாநில அரசு மற்றும் கியூஐ குழுமத்திற்கு சொந்தமானது.[16]
புத்தகங்கள்
சர்ச்சைகள்
2006 ஆண்டு மார்ச் இல் விஜய் ஈஸ்வரன் மற்றும் அவரது வணிக கூட்டாளர்களான ஜோசப் பிஸ்மார்க், தாகம்பே கிண்டனார் மற்றும் டோனா மேரி இம்சன் ஆகியோர் இரண்டு பிலிப்பினோக்களை 100,000 டாலருக்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.[21][22]
2007 மே மாதத்தில் இல் பிலிப்பைன்ஸின் மணிலாவில் அசல் ஸ்தாபகக் குழுவின் இரண்டு முன்னாள் பங்குதாரர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.[23]
இந்தியாவின் சென்னையில் நடந்த மோசடி நடவடிக்கைகளுக்காக கோல்ட் குவெஸ்டுக்கு எதிரான 2003 குற்றச்சாட்டு உச்சநீதிமன்றத்தை அடைந்தது.[24]
ஆகஸ்ட் 2013 இல், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை விஜய் ஈஸ்வரன் நிறுவிய க்னெட் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வருவதாக அறிவித்தது. விசாரணைக்கு அதிகாரிகள் முன் ஆஜராகத் தவறியதால், ஈஸ்வரன் மற்றும் இன்னும் சிலருக்கு எதிராக பொருளாதார குற்றங்கள் பிரிவு நோக்குநிலை அறிவிப்பை வெளியிட்டது.[25]
2016 ஆம் ஆண்டில் மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு 3 வருட விசாரணைக்குப் பின்னர் க்யூனெட் மோசடி தொடர்பாக 30 பேருக்கு எதிராக கண்காணிப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. க்யூனெடின் நிறுவனரான விஜய் ஈஸ்வரன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இடம்பெற்றார்.[26]
2018 ஆம் ஆண்டில் பெப்ரவரியில் சோமாலியாவின் லேபின் விசாரணை நீதிமன்றத்தில் மோசடி செய்ததாக கியூனட் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவை சீனாவில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் விஜய் ஈஸ்வரன் சந்தித்ததாக கூறப்பட்டது.[27][28][29]
தனிப்பட்ட வாழ்க்கை
விஜய் ஈஸ்வரன் க்யூஐ குழுமத்தின் விஜயரத்னம் அறக்கட்டளையின் தலைவரான உமையால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Vijay Eswaran". Forbes இம் மூலத்தில் இருந்து 1 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170801131804/https://www.forbes.com/profile/vijay-eswaran/. பார்த்த நாள்: 18 January 2018.
- ↑ 2.0 2.1 "Vijay Eswaran". https://www.weforum.org/people/vijay-eswaran/.
- ↑ 3.0 3.1 "Raise Yourself To Help Mankind" (in en-US). https://www.rythmfoundation.org/.
- ↑ "Father of Malaysian Hindu Youth dies" (in en). 2011-10-26. https://www.thestar.com.my/news/nation/2011/10/26/father-of-malaysian-hindu-youth-dies.
- ↑ ""Secret Leaders | S02E14 Vijay Eswaran: From Taxi Driver to Billionaire | Season 2 | Episode 14"" இம் மூலத்தில் இருந்து 2018-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181104211058/https://simplecast.com/s/0a36e848.
- ↑ 6.0 6.1 "Breaking the Silence - Business Today (Cover Story)" (in en). https://issuu.com/vijayeswaran/docs/business-today---cover-story.
- ↑ Thomas, Aby Sam (2015-03-20). "Five Minutes With Dr. Vijay Eswaran, Executive Chairman, QI Group of Companies" (in en). https://www.entrepreneur.com/article/244124.
- ↑ "Executive Chairman of QI Group Vijay Eswaran Talks Business and Philanthropy" (in en-US). 2017-07-09. https://interview.net/vijay-eswaran/.
- ↑ Frazier, Donald. "Selling A Better Life" (in en). https://www.forbes.com/sites/donaldfrazier/2012/10/24/selling-a-better-life/.
- ↑ "HKTDC Research". http://research.hktdc.com/.
- ↑ "BERNAMA - Qi Group's Sales Value To Surpass US$1 Billion By Year-End". 2012-08-19 இம் மூலத்தில் இருந்து 2012-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120819045219/http://www.bernama.com/bernama/v6/newsbusiness.php?id=526679.
- ↑ Intelligence, fDi. "View from the C-Suite: QI Group chief puts faith in power of entrepreneurship" (in en-GB). http://www.fdiintelligence.com/Locations/Asia-Pacific/View-from-the-C-Suite-QI-Group-chief-puts-faith-in-power-of-entrepreneurship.
- ↑ "Work starts on RM1.2 billion Qi City" (in en). https://www.thesundaily.my/archive/2147812-ETARCH425001.
- ↑ "Qi City to be completed in two years" (in en). 2016-09-09. https://www.thestar.com.my/business/business-news/2016/09/09/qi-city-to-be-completed-in-two-years.
- ↑ AVINESHWARAN, T. (2016-09-15). "Ipoh to have teaching hospital" (in en). https://www.thestar.com.my/metro/community/2016/09/15/ipoh-to-have-teaching-hospital-the-medical-centre-will-have-840-beds-as-part-of-rm12bil-project.
- ↑ "Quest International University Perak | Ranking & Review". https://www.4icu.org/reviews/14634.htm.
- ↑ "Empowering young girls" (in en). 2016-06-27. https://www.thestar.com.my/metro/community/2016/06/27/empowering-young-girls-centre-pushes-the-boundaries-to-build-life-skills-for-underprivileged.
- ↑ "Foundation aims to empower teenage girls through training kit" (in en). 2018-05-24. https://www.thestar.com.my/metro/metro-news/2018/05/24/foundation-aims-to-empower-teenage-girls-through-training-kit.
- ↑ "MPH - In the Thinking Zone" (in en) இம் மூலத்தில் இருந்து 2018-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181018201703/https://www.mphonline.com/en/productdetails/books/self-help/9789834216726.
- ↑ "On the wings of thought /Vijay Eswaran. – National Library". http://www.nlb.gov.sg/biblio/14224682.
- ↑ "GoldQuest execs seek relief from Supreme Court" (in en-US). https://www.gmanetwork.com/news/story/53782/news/goldquest-execs-seek-relief-from-supreme-court/.
- ↑ "DoJ drops estafa case vs GoldQuest executives" (in en-US). https://www.gmanetwork.com/news/story/58067/news/doj-drops-estafa-case-vs-goldquest-executives/.
- ↑ "News Sunday island" இம் மூலத்தில் இருந்து 2017-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170803045802/http://www.island.lk/2007/08/12/news2.html.
- ↑ Sep 13, Manish Raj | TNN | Updated:; 2014; Ist, 3:37. "Criminal proceedings can be quashed if it’s not a grievous offence: SC | Chennai News - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/city/chennai/Criminal-proceedings-can-be-quashed-if-its-not-a-grievous-offence-SC/articleshow/42391768.cms.
- ↑ Aug 18, Mateen Hafeez | TNN | Updated:; 2013; Ist, 19:16. "EOW makes first arrest in QNet case | Mumbai News - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/city/mumbai/EOW-makes-first-arrest-in-QNet-case/articleshow/21898062.cms.
- ↑ "QNet: Mumbai police issue lookout notice against 10 including Michael Ferreira, Vijay Eswaran". http://www.moneylife.in/article/qnet-mumbai-police-issue-lookout-notice-against-10-including-michael-ferreira-vijay-eswaran/35824/70210.html.
- ↑ "Karnataka elections 2018: BJP alleges Siddaramaiah received luxury watch from absconder Eswaran - The Economic Times". 2018-05-07 இம் மூலத்தில் இருந்து 2018-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180507085815/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-alleges-siddaramaiah-received-luxury-watch-from-absconder-eswaran/articleshow/64054681.cms.
- ↑ Deepika (2018-05-06). "BJP attacks Siddaramaiah for his alleged links with ponzi scam accused Vijay Eswaran" (in en). https://www.oneindia.com/india/bjp-attacks-siddaramaiah-for-his-alleged-links-with-vijayeaswaran-2691448.html.
- ↑ "Karnataka polls: Sambit Patra alleges Siddaramaiah met 'absconder' Vijay Eswaran in China in 2013". https://www.firstpost.com/politics/karnataka-polls-sambit-patra-alleges-siddaramaiah-met-absconder-vijay-eswaran-in-china-in-2013-4458135.html.