விக்ன கணபதி

விக்ன கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 9வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் விக்ன கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.

திதி

விக்ன விநாயகருக்கு(கணபதி) உகந்த திதி நவமி ஆகும். அன்று விக்ன விநாயகருக்கு அபிசேகம், தீபம் காட்டி வழிபட்டால் பொன் வியாபாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்[1]. நவமி திதி அன்று விக்ன கணபதியின் பெயரை 21 முறையோ, 108 முறையோ கூறி பக்தியுடன் வழிபட்டால் சிக்கல்கள், தொல்லைகள் யாவும் விலகி சகல வளங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை[2].

மேற்கோள்கள்

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3382&cat=3
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-07. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
"https://tamilar.wiki/index.php?title=விக்ன_கணபதி&oldid=133013" இருந்து மீள்விக்கப்பட்டது