விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில்
சிவந்தியப்பர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலின் மூலவர் சிவந்தியப்பர் மற்றும் தாயார் வழியடிமைகொண்ட நாயகி ஆவர். தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தீர்த்தம் வாணதீர்த்தம் (பாணதீர்த்தம்) என்றழைக்கப்படுகிறது.[3]
விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°42′53″N 77°23′15″E / 8.7148°N 77.3876°ECoordinates: 8°42′53″N 77°23′15″E / 8.7148°N 77.3876°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி மாவட்டம் |
அமைவிடம்: | விக்கிரமசிங்கபுரம் |
சட்டமன்றத் தொகுதி: | அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 128 m (420 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிவந்தியப்பர் |
தாயார்: | வழியடிமைகொண்ட நாயகி |
குளம்: | வாணதீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சிவராத்திரி ஆருத்ரா தரிசனம் சித்திரை திருவிழா புரட்டாசி திருவிழா ஐப்பசி திருவிழா |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவந்தியப்பர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°42′53″N 77°23′15″E / 8.7148°N 77.3876°E ஆகும்.
சிவந்தியப்பர், வழியடிமைகொண்ட நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், துர்க்கை, கன்னிமூல விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகநயினார், நடராசர், சூரியன், சந்திரன், விநாயகர், சிவசுப்பிரமணியன், மங்கையர்க்கரசி, அதிகார நந்தி, சப்த கன்னியர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "Sivanthiappar Vikramasingapuram". Million Gods (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
- ↑ "சிங்கை அரசாளும் சிவந்தியப்பர் கோவில் வரலாறு". TAMIL VIDHAIPOM. 2023-01-12. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
- ↑ "Shivanthiappar Temple : Shivanthiappar Shivanthiappar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.