வாரணம் ஆயிரம் (திரைப்படம்)

வாரணம் ஆயிரம் (Vaaranam Aayiram) 2008ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் கௌதம். சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2006ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் நவம்பர் 14, 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

வாரணம் ஆயிரம்
திரைப்படத்தின் விளம்பரக்காட்சி
இயக்கம்கௌதம்
தயாரிப்புஆஸ்கார் ரவிச்சந்திரன்
கதைகௌதம்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புசூர்யா
சமீரா ரெட்டி
திவ்யா ஸ்பந்தனா
சிம்ரன்
ஒளிப்பதிவுR. ரத்னவேலு
படத்தொகுப்புஅந்தோணி
விநியோகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
கிலவ்ட் நைன்
ஐக்கிய அமெரிக்கா பாரத் கிரியேசன்
வெளியீடுநவம்பர் 14,2008
ஓட்டம்3மணித்தியாலம்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு14 கோடி ரூபாய்[1]

வாரணம் ஆயிரம் படத்தில், ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்வையாக சொல்லப்படுகின்றன. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கதை

வார்ப்புரு:Spoiler

ராணுவ அதிகாரி மேஜர் சூர்யா, ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் அவருடைய தந்தை மரணச் செய்தி வருகிறது. மனம் உடைந்து போனாலும் தந்தை சொல்லிக் கொடுத்த கடமையுணர்வு பாதியில் அவரைத் திரும்ப விடாமல் தொடர்ந்து அந்த மீட்புப் பணியில் இறங்க வைக்கிறது. பிளாஷ்பேக்கில் தந்தையின் நினைவுகள் மனதுக்குள் அவிழ, அவை காட்சிகளாக விரிகின்றன.

அப்பா கிருஷ்ணன் (சூர்யா) ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், அம்மா மாலினி (சிம்ரன்), தங்கை என உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த நாயகன் சூர்யா (சூர்யா), திருச்சி பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அப்பா செல்லம். வகுப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா பார்த்தபடி ஊரைச் சுற்றிப் பொழுதைக் கழிக்கிறார்.

ஒரு திடீர் தருணத்தில் மேக்னா (சமீரா) என்ற தேவதையை போன்ற ஒரு பெண்ணை ரயிலில் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பேச்சுவாக்கில் அவள் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்கப்போவதைத் தெரிந்து கொள்கிறார். நிச்சயம் உன் வாழ்க்கையில் நான் வந்தே தீருவேன், என கூறுபவர் அதைச் செய்தும் காட்டுகிறார். ஆனால் எதிர்பாராத விபத்தில் மேக்னா மரணமடைகிறாள். அவளைப் பறிகொடுத்து, பித்துப் பிடித்து அலையும் சூர்யாவை அப்பாவும் அம்மாவும்தான் மீண்டும் மனிதனாக மாற்றுகிறார்கள்.

அந்த நேரத்தில் சூர்யா வாழ்க்கையில் ப்ரியா (திவ்யா ) நுழைகிறாள், சூர்யா ராணுவ அதிகாரியாகிறான்... எல்லாமே தந்தையின் வழிகாட்டுதல்களுடன். தந்தை ஒரு நாள் மரணத்தைத் தழுவுகிறார்... சூர்யாவின் உலகம் முடிவுறுகிறது. ஆனால், அதன் பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார் அம்மா.

நடிப்பு

  • சூர்யா - கிருஷ்ணன் மற்றும் சூர்யா எனும் தந்தை, மகன் ஆகிய இரு முதன்மை கதாபாத்திரமாக நடிக்கின்றார் அதில் தந்தை கதாபாத்திரம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார் .
  • சமீரா ரெட்டி - மேக்னாவாக சூர்யா முதலில் காதலிக்கும் பெண்னாக தோன்றுகின்றார். கதையின் நடுவில் குண்டு வெடிப்பில் இறக்கின்றார்.
  • திவ்யா ஸ்பந்தனா - பிரியாவாக சூர்யாவின் மனைவியாக நடிக்கின்றார்.
  • சிம்ரன் - மாலினி கிருஷ்ணன் ஆக கிருஷ்ணனின் மனைவியாகவும், சூர்யாவின் தாயாகவும் நடிக்கின்றார்.

பாடல்கள்

வாரணம் ஆயிரம்
ஆல்பம்
வெளியீடுசெப்டம்பர் 24, 2008
இசைத்தட்டு நிறுவனம்Sony BMG
இசைத் தயாரிப்பாளர்ஆஸ்கார் ரவிசந்திரன்
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை
'சத்யம்
(2008)
வாரணம் ஆயிரம் 'அயன்
(2009)

வாரணம் ஆயிரம் திரைப்படம் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது. ஏத்தி ஏத்தி பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். மற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் தாமரை.

பாடல் பாடகர்கள்
அடியே கொல்லுதே பென்னி தயாள், கிரிஷ்,சுருதி ஹாசன்
நெஞ்சுக்குள் பெய்திடும் ஹரிஹரன், தேவன்,பிரசன்னா
ஏத்தி ஏத்தி பென்னி தயாள், நரேஷ் ஐயர்
முன் தினம் நரேஷ் ஐயர்,பிரசாந்தினி
ஓ சாந்தி சாந்தி கிளிண்டன்,எஸ். பி. பி. சரண்
அவ என்ன கார்த்திக்,பிரசன்னா
அனல்மேலே பனித்துளி சுதா ரகுநாதன்

மேற்கோள்கள்

வலைப்பதிவு விமர்சனங்கள்

வெளி இணைப்புக்கள்

- தட்ஸ் தமிழில் வாரணம் ஆயிரம் விமர்சனம்[தொடர்பிழந்த இணைப்பு]வார்ப்புரு:கௌதம் மேனன் திரைப்படங்கள்