வான் ரமோன் ஹிமெனெஸ்
வான் ரமோன் ஹிமெனெஸ் (1881 - 1958) ஸ்பெயினிலுள்ள 'மொகியர்' என்ற நகரத்தில் பிறந்தவர். தனது பதினேழாவது வயதில் மட்றிட் றிவியூ இதழில் வெளியான கவிதைகள் மூலம் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றார். தூரத்துப் பூங்கா (1905), சமீபத்தில் மணமான ஒரு கவிஞனின் நாட்குறிப்பு (1917), 'பாதாளத்தில் ஒரு விலங்கு' முதலிய நூல்கள் புகழ் பெற்றவை. 1956இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.