வழக்கொழிந்த தமிழ் சொற்கள்
பல தமிழ் சொற்கள் காலப்போக்கில் வழக்கொழிந்து போயுள்ளன. சில சொற்கள், அது பயன்பாட்டில் வந்த காலத்தில் இருந்த பொருளுக்கும், அதன் இன்றைய பொருளுக்கும் வேறுபட்டுள்ளது. இதற்கான காரணங்கள் வேறுபட்டவை.
வழக்கொழிந்த சொற்கள்
- உஞற்றல் [1]- செய்தல் எனும் பொருளில் இது பயன்பாட்டில் இல்லை[சான்று தேவை]
- மடி [1] - சோம்பல் எனும் பொருளில் இது பயன்பாட்டில் இல்லை
(குமரி மாவட்டத்தில் பேச்சுவழக்கில் இச்சொல் உள்ளது)
பொருள் மாறிய சொற்கள்
- கிழவன்/கிழவி[2] - இக்காலத்தில் இதன் பொருள் வயதான ஆண் பெண்ணைக்குறிக்கிறது. சங்க காலத்தில் பொதுவான ஆண்/பெண்ணைக் குறிக்கவே இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.