வலன்டைன் டானியல்

வலன்டைன் டானியல்
Valentine Daniel
முழுப்பெயர் வலன்டைன்
டானியல்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது கல்விமான்
கல்வி அமெர்ஸ்ட் கல்லூரி,
சிக்காகோ
பல்கலைக்கழகம்
பணி கல்விமான்


பேராசிரியர் எரோல் வலன்டைன் டானியல் (Errol Valentine Daniel) இலங்கைத் தமிழ் கல்விமானும், மானிடவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர் மானிடவியல் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

வலன்டைன் டானியல் இலங்கையின் மலையகத்தில் நாவலப்பிட்டி நகரில் பிறந்தவர். கம்பளை புனித அன்ட்றூஸ் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பணி

வலன்டைன் டானியல் 1978 முதல்-1990 வரை வாசிங்டன் பல்கலைக்கழகத்திலும் பின்னர் மிச்சிகன் பல்கலைகழகத்திலும் (1990-97) விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1995 முதல் 1997 வரை சமூக உருமாற்றத்துக்கான ஒப்பீட்டு ஆய்வு நிலையத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். அத்துடன் ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்), ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

டானியல் 1995 ஆம் ஆண்டுக்கான கூகனைம் ஆய்வுதவி பெற்றவர்களில் ஒருவராவர். இவர் தமிழ், சிங்களம், பிரெஞ்சு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றுள்ளார்.

நூல்கள்

வலன்டைன் டானியல் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்:

  • Karma: An Anthropological Inquiry (1983, University of California Press. சார்ல்சு கேயெசுடன் இணைந்து)
  • Fluid Signs: Being a Person the Tamil Way (1984, University of California Press)
  • The Semeiosis of Suicide in Sri Lanka (1989, in Semiotics, Self, and Society by Benjamin Lee and Greg Urban, Mouton de Gruyter)
  • Plantations, Proletarians, and Peasants in Colonial Asia (1992, Frank Cass & Co, இணைந்து எழுதியோர்: Henry Bernstein, Tom Brass)
  • Culture/Contexture: Essays in Anthropology and Literary Study (1996, University of California Press, இணைந்து எழுதியவர்: Jeffrey M. Peck)
  • Mistrusting Refugees (1996, University of California Press, இணைந்து எழுதியவர்: John Knudsen)
  • Charred Lullabies: Chapters in an Anthropography of Violence (1997, Princeton University Press)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வலன்டைன்_டானியல்&oldid=2800" இருந்து மீள்விக்கப்பட்டது