வந்தவாசி வட்டம்

வந்தவாசி வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வந்தவாசி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 8 உள்வட்டங்களும், 161 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,74,079 ஆகும். அதில் 1,39,040 ஆண்களும், 1,35,039 பெண்களும் உள்ளனர். 62,681 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 87.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[1]]. இவ்வட்டத்தில் எழுத்தறிவு 74.51% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 33510 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 967 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 89,535 மற்றும் 6,151 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.23%, இசுலாமியர்கள் 4.78%, கிறித்தவர்கள் 1.84%, சமணர்கள் 1.03% மற்றும் பிறர் 0.03% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வந்தவாசி_வட்டம்&oldid=84134" இருந்து மீள்விக்கப்பட்டது