வண்ணதாசன்


வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்[1]. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[2]

வண்ணதாசன்
வண்ணதாசன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வண்ணதாசன்
பிறப்புபெயர் சி.கல்யாணசுந்தரம்
பிறந்ததிகதி 22 ஆகத்து 1946
பிறந்தஇடம் திருநெல்வேலி
அறியப்படுவது எழுத்தாளர்

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.[3] 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.[4].சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.[5] தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது.[6]

சிறுகதைத் தொகுப்புகள்

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. சமவெளி
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
  5. மனுஷா மனுஷா
  6. கனிவு
  7. நடுகை
  8. உயரப் பறத்தல்
  9. கிருஷ்ணன் வைத்த வீடு
  10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  11. சில இறகுகள் சில பறவைகள்
  12. ஒரு சிறு இசை

புதினங்கள்

  1. சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்

  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்

  1. அகம் புறம்

கடிதங்கள்

  1. வண்ணதாசன் கடிதங்கள்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art
  2. "Vannadhasan to receive Sahitya Akademi - வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!". www.vikatan.com. 21 திசம்பர் 2016. http://www.vikatan.com/news/tamilnadu/75546-sahitya-akademi-award-for-vannatacan.art. பார்த்த நாள்: 21 திசம்பர் 2016. 
  3. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. "தொடுகறி: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது!". தி இந்து. http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece. பார்த்த நாள்: 23 October 2016. 
  5. Tamilselvan.S (2018-06-10), "வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!", Vikatan, retrieved 2018-06-10
  6. "கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!". https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-tamil-university-announced-honour-doctorate-to-writer-vannadasan-and-professor-a-sivasubramanian. 
  7. "எம். எஸ். என் தளச் செய்தி" இம் மூலத்தில் இருந்து 2007-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070513022717/http://content.msn.co.in/Tamil/News/Regional/0705-11-1.htm. 
  8. "சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார் வண்ணதாசன்". https://www.vikatan.com/arts/literature/writer-charu-nivedita-elected-for-2022-vishnupuram-literary-award. 
  9. "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது". http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9223229.ece. பார்த்த நாள்: 23 October 2016. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வண்ணதாசன்&oldid=5775" இருந்து மீள்விக்கப்பட்டது