வண்டலூர் வட்டம்

வண்டலூர் வட்டம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் 32 கிராம ஊராட்சிகளைக்[1] கொண்டு நவம்பர், 2019-இல் நிறுவப்பட்ட புதிய வருவாய் வட்டம் ஆகும்.[2][3] வண்டலூர் வருவாய் வட்டம் 37 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [4]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வண்டலூர் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 55,630 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,422 ஆக உள்ளது. [5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வண்டலூர்_வட்டம்&oldid=126361" இருந்து மீள்விக்கப்பட்டது