வடக்கு வாசல் (திரைப்படம்)

வடக்கு வாசல் (Vadakku Vaasal) என்பது பி. எம். சுந்தர் இயக்கிய 2003 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். இப்படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், ஆனந்தராஜ், அலெக்ஸ், கமலேஷ், பாண்டு, சகீலா, நளினி, நித்யா ரவீந்திரன், சேது விநாயகம் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். என். விஜய் முரளி தயாரித்த இப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஸஷ் இசையமைத்துளார். இப்படம் 10 அக்டோபர் 2003 இல் வெளியிடப்பட்டது.[1][2][3][4]

வடக்கு வாசல்
இயக்கம்பி. எம். சுந்தர்
தயாரிப்புஎன். விஜய் முரளி
கதைபி. எம். சுந்தர்
இசைஎஸ். பி. வெங்கடேஷ்
நடிப்புகார்த்திக் குமார்
ரித்தனா
ஒளிப்பதிவுடி. சாய் நடராஜ்
படத்தொகுப்புஎம். சசி கிருஷ்ணா
கலையகம்மகா மூவி மேக்கர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 10, 2003 (2003-10-10)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

ஒரு தொலைதூர கிராமத்தில், கவலையற்ற கல்லூரி மாணவன் முரளி (கார்த்திக் குமார்) தனது பெற்றோர், அவரது சகோதரி ஆகோயோருடன் மதுபானக் கடையை நடத்தி வரும் தனது மைத்துனருடன் வசித்து வருகிறார். முரளி தனது கல்லூரித் தோழி பிரியாவுடன் (ரிதானா) நட்பு கொண்டிருக்கிறார், இறுதியில் அவர்கள் ஒருவருக்கொருவர் காதலிக்கத் துவங்குகின்றனர். பிரியாவின் சகோதரர் பாண்டியன் (கமலேஷ்) மற்றும் பிரியாவின் தந்தை ராமசாமி ( சேது விநாயகம் ) அவர்களின் காதலை எதிர்க்கிறார்கள். இந்த பிரச்சனைகளினால் முரளி போலீசாரால் கைது செய்யப்படுவதால் நிலைமை மோசமடைகிறது. அதன்பிறகு, பாண்டியனும் ராமசாமியும் தங்கள் கிராமத்து கோவிலில் தங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு ஏழை இளைஞனுடன் பிரியாவுக்கு திருமணம் செய்விக்க அவசரமாக ஏற்பாடு செய்கிறனர். திருமணத்திற்கு சற்று நேரத்துக்கு முன்பு முரளி பிரியாவை அழைத்துக்கொண்டு கிராமத்திலிருந்து ஓடிவிடுகிறார். இந்த விஷயம் கிராம மக்களிடையே கலவரத்தைத் தூண்டுகிறது. உள்ளூர் அரசியல்வாதி அண்ணாமலை ( லிவிங்ஸ்டன் ) மற்றும் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் ( ஆனந்தராஜ் ) ஆகியோர் நிலைமையை கட்டுபட்டுத்த முயற்சிக்கின்றனர்.

காலர் இருவரும் சென்னைக்கு வந்து முரளியின் நண்பர் ராமகிருஷ்ணா ( பாண்டியராஜன் ) என்பவருடன் வசித்து வருகின்றனர். முரளி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்யத் தொடங்குகிறார். அதே நேரத்தில் பிரியா முரளிக்கு பொருளாதார ரீதியாக உதவ, வேலை ஒன்றைத் தேட முடிவு செய்கிறாள். ஆனால் ஒரு விபச்சார தரகர் அவளை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறான். இதில் ஏற்பட்ட சிக்கலில் அவள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினரால் தவறாக கைது செய்யப்படுகிறாள். இரக்கமுள்ள பாய் ( அலெக்ஸ் ) அவளை மீட்க வருகிறார், இதனால் பிரியா விடுவிக்கப்படுகிறார். பாய் காதலர்களுக்கு உதவ முடிவுசெய்து, அவர்கள் வாழ மற்றொரு இடத்தைக் ஏற்பாடு செய்கிறார். பின்னர், பாய் அவர்களை அவர்களின் சொந்த கிராமத்திற்குத் திரும்பும்படி வலியுறுத்துகிறார். கிராமத்துக்குச் சென்ற பாய், அண்ணாமலை, அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் அவர்களின் சாதி வெறியை ஒதுக்கி வைக்கவும், இளம் காதலர்களை ஆதரிக்குமாறும் கிராம மக்களை சமாதானப்படுத்துகிறார்கள். முரளியும் பிரியாவும் முதலில் தங்கள் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலை தேட விரும்புகிறார்கள், பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.

நடிகர்கள்

  • கார்த்திக் குமார் முரளியாக
  • ரித்திகா பிரியாவாக
  • லிவிங்ஸ்டன் அண்ணாமலையாக
  • பாண்டியராஜன் ராமகிருஷ்ணனாக (கௌரவத் தோற்றம்)
  • ஆனந்த் ராஜ் அலெக்ஸ் பாண்டியனாக
  • அலெக்ஸ் பாய்'யாக
  • கமலேஷ் பிரியாவின் சகோதிரர் பாண்டியனாக
  • பாண்டு கல்லூரி ஆசிரியராக
  • சகீலா ஓமனகுட்டியாக
  • நளினி பிரியாவின் தாயாக
  • நித்தியா ரவீந்திரன் முரளியின் சகோதரியாக
  • சேது விநாயகம் பிரியாவின் தந்தை ராமசாமியாக
  • எஸ். வி. தங்கராஜ் அண்ணாமலையின் தனி உதவியாளராக
  • பயில்வான் ரங்கநாதன் ஓமனக்குட்டியின் கணவராக
  • அனூப் குமார்
  • சி. மதுராஜ் சண்முகம்
  • பி. ரகுநாத்
  • கதிரா நாசர் ரூபாவாக
  • லீனா கோபினாத்
  • திரைநீதி செல்வம்
  • மதுரை செல்வம்
  • கோவை செந்தில் பஞ்சாயத்து உறுப்பினராக
  • செல்லதுரை நாட்டாமையாக
  • பாஸ்கர்
  • அருள்

இசைப்பதிவு

படத்திற்கான பின்னணி இசை, பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் சிறீகாந்து தேவா மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் பிறைசூடன் மற்றும் காமகோடியன் எழுதிய 6 பாடல்கள் உள்ளன.[5][6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வடக்காலே"  பிரபாகர் 4:52
2. "தந்தன தான"  திப்பு, கங்கா 5:56
3. "எட்டுத்திக்கும் வெற்றி"  புஷ்பவனம் குப்புசாமி 5:45
4. "அரங்கேறும்"  பிரபா, உத்ரா, ஜெயராஜ் 5:27
5. "துணிவுடன்"  கிருஷ்ணராஜ், மஞ்சுஸ்ரீ 5:20
6. "எல்லா மதங்களுமே"  மாணிக்க விநாயகம் 3:26
மொத்த நீளம்:
30:46

குறிப்புகள்