லேனா தமிழ்வாணன்
லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள்[1], வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்வாணன், மணிமேகலை தம்பதியின் புதல்வர். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் 1954இல் பிறந்தவர்.
விருதுகள்
- நாமக்கல்லில் உள்ள எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இவரது ஒரு பக்கக் கட்டுரை 500 என்னும் நூலுக்கு 2011 ஆம் ஆண்டு பரிசு வழங்கியது[2]
- 2014 ஆம் ஆண்டு லேனா தமிழ்வாணனுக்கு அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது[3][4].
மேற்கோள்கள்
- ↑ "Tamil Virtual University". பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ "23 எழுத்தாளர்களுக்கு ரூ.3.4 லட்சம் பரிசு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ "லேனா தமிழ்வாணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்". தினமலர். 20 பிப் 2014. http://w.dinamalar.com/news_detail.asp?id=919670. பார்த்த நாள்: 12 சூலை 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஆக்கபூர்வமான நம்பிக்கையே வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவசியமானது -லேனா தமிழ்வாணன் | SBS Your Language".[தொடர்பிழந்த இணைப்பு].