லூல்கந்துரை

லூல்கந்துரை இலங்கையின் முதலாவது தேயிலைப் பெருந்தோட்டமாகும். இது 1867 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது கண்டிக்கு அருகில் அமைந்துள்ளது.[1][2] இலங்கையில் தேயிலையின் உற்பத்தி, தீவில் காணப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் (Hemileia vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்லர் 1867 தேயிலையைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிரிடப்பட்டது. மேலும் டெய்லர் இங்கு தேயிலை அரைக்கும் பொறி ஒன்றைக் கொண்ட தேயிலைத் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்தார்.

லூல்கந்துரை தேயிலைப் பெருந்தோட்டத்துக்கான பெயர் பலகை

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லூல்கந்துரை&oldid=29000" இருந்து மீள்விக்கப்பட்டது