லூசியா (திரைப்படம்)

லூசியா (Lucia) 2013 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இப்படத்திற்கு கதை எழுதி, இயக்கியவர் பவன் குமார்.இது கன்னட மொழியில் கூட்டு நிதிநல்கை மூலம் தயாரிக்கப்பட்ட முதல் படமாகும்.[3] சதீஷ் நினாசம், சுருதி ஹரிஹரன் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இலண்டனில் நிகழ்ந்த இந்தியத் திரைப்பட விழாவில், ரசிகர்களுக்கான சிறந்த படம் என்ற விருதினைப் பெற்றது.

லூசியா
ಲೂಸಿಯ
இயக்கம்பவன் குமார்
தயாரிப்புஆடியன்ஸ் பிலிம்ஸ்
ஹோம் டாக்கீஸ்
கதைபவன் குமார்
இசைபூர்ணசந்திர தேஜஸ்வி
மோனிஷ் குமார் எம். கே.
சந்தோஷ் நாராயணன்
நடிப்புசதீஷ் நினாசம்
சுருதி ஹரிஹரன்
அச்யுத் குமார்
ரிஷப் ஷெட்டி
ஒளிப்பதிவுசித்தார்த் நுனி
படத்தொகுப்புசனத்–சுரேஷ்
பவன் குமார்
கலையகம்ஆடியன்ஸ் பிலிம்ஸ்
விநியோகம்ஹோம் டாக்கீஸ்
வெளியீடுசூலை 20, 2013 (2013-07-20)(இலண்டன் திரைப்பட விழா]])
6 செப்டம்பர் 2013 (India)
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு50 இலட்சம் (US$63,000)[1]
மொத்த வருவாய்3 கோடி (US$3,80,000) [2]

கதைச் சுருக்கம்

இந்தப் படத்தின் திரைக்கதை இரண்டு வாழ்கைகளை இரண்டு அடுக்குளில் சொல்கிறது. ஒன்று நிஜவாழ்வில் இன்னொன்று கனவுலகில். திரையரங்கில் வேலைபார்க்கும் சாதாரன மனிதன். அவன் தூக்கம் வராமல் அவதியுறுகிறான். இந்திலையில் தூக்கத்தில் தான் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்காக லூசியா என்னும் மாத்திரையை உட்கொள்கிறான். இதனால் கனவுலகில் முன்னணி நடிகனாக ஆகிறான். கனவுலகில் காதலும் சொய்கிறான். அதே சமயம் நிஜ வாழ்விலும் அவனுக்கு காதல் வருகிறது. அவனுடன் இருப்பவர்களுக்கு ஆபத்து போன்றவை ஏற்படுகிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும் தனித்த சிக்கல்கள் உள்ளன. எளிய மனிதன் திரையுலக மனிதர்களின் சொகுசு வாழ்வை எளியவர்கள் கனவு காண்பது போலவே, எளிய மனிததின் நிம்மதியான வாழ்வுக்காக நட்சத்திரங்கள் ஏங்குகிறார்கள் என்ற செய்தியை இப்படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

பாடல்கள்

# பாடல் பாடியோர் எழுதியவர்
1 ‘ஹேளு சிவ‘ நவீன சஜ்ஜு, ரட்சித் நாகர்லே, யோகராஜ் பட் யோகராஜ் பட்
2 ஜம்ம ஜம்ம நவீன சஜ்ஜு பூர்ண சந்த்ர தேஜஸ்வி எஸ் வி
3 யாகோ பரலில்ல நவீன சஜ்ஜு பூர்ண சந்த்ர தேஜஸ்வி எஸ் வி
4 தின்பெடாகம்மி பப்பி பிலாசம், பூர்ண சந்திர தேஜஸ்வி எஸ் வி, அருண் எம் சி பூர்ண சந்திர தேஜஸ்வி எஸ் வி
5 நீ தொரேத களிகெயலி அனன்ய பட், உதித் ஹரிதாஸ் ரகு சாஸ்திரி வி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லூசியா_(திரைப்படம்)&oldid=29762" இருந்து மீள்விக்கப்பட்டது