லிந்தமுல்லை பத்தினிக் கோயில்
லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (Lindamulla Pattini Devalaya, சிங்களம்: ළිඳමුල්ල පත්තිනි දේවාලය) என்பது இலங்கையின் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோயில் ஆகும். இது தெமோதரை - ஓடைப் பள்ளத்தாக்கு - பதுளை பிரதான சாலையில், முத்தியங்கனா ராஜ மகா விகாரையிலிருந்து சுமார் 1.5 km (0.93 mi) தொலைவில் உள்ளது. இக்கோயிலானது பிள்ளைப்பேறு மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வம் என்று நம்பப்படும் சிங்கள தெய்வமான பத்தினிக்கு (கண்ணகி கட்டபட்டுள்ளது.[2] இக்கோயிலானது தொல்லியல் சிறப்புமிக்க பாதுகாக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாக அரசாங்கத்தால் முறையாக 8 சூலை 2005 அன்று அரசாங்க வர்த்தமானி எண் 1401 இன் வழியாக அறிவிக்கபட்டுள்ளது. [3]
லிந்தமுல்லை பத்தினிக் கோயில் Lindamulla Pattini Devalaya ළිඳමුල්ල පත්තිනි දේවාලය | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | இலங்கை, பதுளை |
புவியியல் ஆள்கூறுகள் | 06°58′47.6″N 81°04′10.7″E / 6.979889°N 81.069639°E |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | ஊவா மாகாணம் |
மாவட்டம் | பதுளை |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 8 சூலை 2005[1] |
கோயில்
இந்த கோவிலில் வளாகத்தில் மாலிகவா (கருவறை), சமையலறை, போதி மரத்துடன் புத்தர் சன்னதி ஆகியவை உள்ளன. இருப்பினும் கருவறைக்கு முன்னால் சிங்காசன மண்டிராயா (அரியாசன அறை) இல்லை. சன்னதியின் வெளிப்புறச் சுவரானது பல்வேறு பழங்கால ஓவியங்களால் அழகூட்டபட்டுள்ளது.
மேலும் காண்க
குறிப்புகள்
- ↑ "Protected Monument List 2012-12-12". தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை. 12 December 2012 இம் மூலத்தில் இருந்து 2018-11-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181123073223/http://www.archaeology.gov.lk/web/images/pdf/protected%20monument%20list%202012-12-12.pdf. பார்த்த நாள்: 27 June 2017.
- ↑ "லிந்தமுல்லை பத்தினிக் கோயில் (பதுளை)". இலங்கை பிரதீபா. 30 டிசம்பர் 2018. https://www.lankapradeepa.com/2018/12/lindamulla-pattini-devalaya.html.
- ↑ "Gazette". இலங்கை அரச வர்த்தமானி 1401. 8 July 2005.